Type Here to Get Search Results !

201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது: 2017-ம் ஆண்டுக்கான விருது விஜய்சேதுபதிக்கு...தமிழக அரசு அறிவிப்பு

பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் தமிழக அரசு அறிவித்துள்ளது. இயல், இசை, நாடகம் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது அறிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த 2011-ம் ஆண்டிற்கு பிறகு கலைமாமணி விருது அறிவிக்கப்படவில்லை, இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு சேர்த்து தற்போது 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகளுடன் தலா ரூ.1 லட்சம் காசோலையுடன் சான்றிதழும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கலைமாமணி விருது நடிகர்கள்: கலைமாமணி விருதுகளில், 2017 ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது தமிழக முன்னனி நடிகர் விஜய்சேதுபதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர்கள் விஜய் ஆண்டனி, சசிகுமார், கார்த்தி, சந்தானம், பிரசன்னா, பிரபுதேவா, சரவணன், பொன்வண்ணன், ஆர். ராஜசேகர், பி.ராஜீவ், பி.பாண்டு, டி.பி.கஜேந்திரன், ஆர்.பாண்டியராஜன் மற்றும் நகைச்சுவை நடிகர் சூரி ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைமாமணி விருது நடிகைகள்: பழம்பெரும் நடிகைகள் குமாரி காஞ்சனா தேவி, சாரதா, நளினி, சித்ரா லட்சுமணன், பி.ஆர்.வரலட்சுமி, குட்டிபத்மினி, புலியூர் சரோஜா, ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இசைப்பிரிவில் எஸ்.ஜானகி, சரோஜா, லலிதா, டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா, பொம்மலாட்டக்கலைஞர் சோமசுந்தரம், நாட்டுப்புற கலைஞர் வேல்முருகன் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், வாசுகி கண்ணப்பன், முனைவர் கி.சேகருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கானா உலகநாதன் ஆகியோருக்கும் கலைமாமணி வழங்கப்படுகிறது பாரதி விருது: அறிவிப்பு இயல் பிரிவில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் சுப்பு ஆறுமுகம், சிவசங்கரி ஆகியோருக்கு பாரதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பால சரஸ்வதி விருது: கலைஞர்கள் வைஜெயந்தி மாலா பாலி, வி.பி.தனஞ்ஜெயன், சி.வி.சந்திரசேகருக்கு பால சரஸ்வதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad