Type Here to Get Search Results !

எதற்காக போலி புகைப்படங்களை பரப்புகிறீர்கள்... நடவடிக்கை பாயும்... சி.ஆர்.பி.எப். எச்சரிக்கை

புல்வாமா தாக்குதல் தொடர்பாக போலியான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு சி.ஆர்.பி.எப். எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பணிக்கு திரும்பினர். 

அவர்கள் அனைவரும் 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். 

அப்போது, புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் சென்ற போது அடில் அஹம்த் தர் என்ற திவிரவாதி வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரை வேகமாக ஓட்டி வந்து ராணுவ வீரர்கள் வந்த ஒரு பஸ் மீது மோதினான். 

இதில் வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்தன. பஸ்ஸில் இருந்த 76-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அனைவரும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டனர். 

இதில், சிலரின் உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அவர்களது உடல்கள் அடையாளம் காணப்பட்டது. 

இந்தநிலையில், மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில், வீரர்களின் உடல்கள் சிதறிக் கிடப்பது போல் போலியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. 

போலியாக வெளியிடப்படும் புகைப்படங்கள், வீடியோ தொடர்பாக டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப். எனப்படும் துணை ராணுவப்படை தலைமை அலுவலகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது

. பலியான வீரர்களின் குரூப் போட்டோ, கடைசி செல்பி மற்றும் கொல்லப்பட்டவர்களின் சிதைந்துபோன உடல் பாகங்கள் என பதிவேற்றம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ராணுவப்படை தலைமை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முன்னதாக, தீவிரவாதி தாக்குதலில் வீரர்கள் உயிரிழந்ததை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் என சிஆர்பிஎப் தெரிவித்தது.

Top Post Ad

Below Post Ad