Type Here to Get Search Results !

புல்வாமா தீவிரவாத தாக்குதலை புகழ்ந்தவர்கள் மீது நடவடிக்கை


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலை ஆதரிக்கும் விதமாக சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். 

Aஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ரியாஸ் அகமது வானி என்பவர் மும்பையை மையமாக கொண்டு இயங்கும் ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் ஒரு பதிவை வெளியிட்டார். 

அதில், ‘உண்மையான துல்லியத் தாக்குதல் இதுதான்' என அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கானோர் கண்டனம் தெரிவித்தனர். 

இந்த விவகாரம் குறித்து ரியாஸ் பணிபுரியும் நிறுவனத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக அவரை அந்நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது. 

மேலும், இதுகுறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால், பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. இதேபோல், புல்வாமா தாக்குதலை புகழ்ந்து பதிவிட்டதாக கூறி, தமது ஊழியரான இக்பால் உசேன் என்பவரை அகமதாபாதை மையமாக கொண்டு செயல்படும் காப்பீட்டு நிறுவனம் ஒன்று சஸ்பெண்ட் செய்துள்ளது. 

மேலும், இத்தாக்குதலை வரவேற்று பதிவிட்டதாக, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். 

பல்கலைக்கழகம் அளித்த புகாரின்பேரில், அவர் மீது காவல் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

Top Post Ad

Below Post Ad