Type Here to Get Search Results !

வாட்ஸ் அப் அப்டேட் பண்ணாதீங்க

அப்டேட் செய்தால் அனைத்தும் அழியும் - வாட்ஸ்அப் பீட்டா செயலியில் புதிய சிக்கல்!

வாட்ஸ்அப்

பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அது அனைத்து பயனாளர்களுக்கு கொடுக்கப்படுவதற்கு முன்பாக பீட்டா செயலியில் கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும். அதை பீட்டா டெஸ்ட்டர்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியும். அது பரிசோதனைக்காகவே கொடுக்கப்படும் என்பதால், அந்தச் செயலியில் சில பிரச்னைகள் இருக்கலாம். அதுபோல தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள பீட்டா செயலியின் ஒரு பதிப்பில் போட்டோக்கள் உட்பட சில மீடியா ஃபைல்கள் ஆகியவை அழியும் Bug ஒன்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் 2.19.66 பதிப்பில் இந்தப் பிரச்னை உள்ளதாக அதைப் பயன்படுத்திய சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே, இந்தப் பதிப்புக்கு செயலியை அப்டேட் செய்ய வேண்டாம் எனவும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இதே நேரம் சாட்களில் காணாமல் போன ஃபைல்கள் அனைத்தும் கேலரியில் அழியாமல் இருந்திருக்கிறது. மேலும், ஸ்டேட்டஸ் பகுதியில் சில நபர்களின் புகைப்படம் தெரியவில்லை என்றும் இதனால் அவர்களால் பிளாக் செய்து விட்டார்களோ என்று சந்தேகம் எழுந்ததாகவும்  சிலர் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்னையை சரி செய்வதற்கான அப்டேட்டைக் கொடுத்து விட்டதாக வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பிரச்னை இன்னும் இருப்பதாகச் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.


Top Post Ad

Below Post Ad