Type Here to Get Search Results !

சென்னையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச தொலைபேசி வசதி அறிமுகம்

சென்னை மாநகரில் சுரங்கத்தில் இயங்கும் 19 மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச தொலைபேசி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுரங்க ரயில் வழித்தடத்தில் செல்போன் சிக்னல் கிடைப்பதில் பிரச்சனை இருப்பதால் மெட்ரோ நிர்வாகம் இலவச தொலைபேசி வசதியை அறிமுகம் செய்துள்ளது. திருமங்கலம் – எழும்பூர் இடையே ஏர்டெல் மற்றும் ஜியோ செல்போன் சிக்னலும், சைதாப்பேட்டை – டிஎம்எஸ் இடையே வோடாபோன் செல்போன் சிக்னல் கிடைப்பதாகவும் , வண்ணாரப்பேட்டை – டிஎம்எஸ் இடையிலான சுரங்க ரயில் நிலையங்களில் விரைவில் செல்போன் சிக்னல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.


Top Post Ad

Below Post Ad