Type Here to Get Search Results !

தேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை...!!









தேர்தல் பயிற்சிக்கு வராத 8 அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.

 இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரி தி.அருண் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு



 புதுவை மக்களவைத் தொகுதி, தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கு ஏப். 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 இதற்கான பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கு முதல் கட்டப் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 23-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 4 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

 இந்த நிலையில், தகுந்த காரணமில்லாமல் முதல் கட்டப் பயிற்சி வகுப்பில் பங்கு பெறாத 92 அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, 84 அலுவலர்களிடம் இருந்து விளக்கம் பெறப்பட்டது.




 நோட்டீஸ் பெற்றும் எந்த விளக்கமும் அளிக்காத 8 அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்யவும், அந்த அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் அந்தந்தத் துறைத் தலைவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad