Type Here to Get Search Results !

ஃபனி புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா? எங்கு கரையை கடக்கும்.. வானிலை மையம் என்ன சொல்கிறது?

வங்கக் கடலில் உருவாக இருக்கும் ஃபனி புயல் பெரும்பாலும் சென்னைக்கு அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தமிழகத்தில் தற்போது கோடைகாலம் நடைபெற்று வருகிறது என்று சொன்னால் யாரும் கண்டிப்பாக நம்ப மாட்டார்கள் ஆம் கோடை மழை லேசாக பெய்து விட்டு சென்றுவிடும் என்று நினைத்தவர்களுக்கு தற்போது புயல் ஒன்று காத்துக் கொண்டு இருக்கிறது. வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேரம் செல்ல செல்ல வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் 36 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கு ஃபனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம் இந்த புயல் எங்கு கரையை கடக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் இது பெரும்பாலும் தமிழகத்தில்தான் கரையை கடக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் இந்த வாரத்தில் இந்த புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். அதேபோல் ஃபனி புயல் சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். ஒருவேளை இந்த புயல் சென்னையில் கரையை கடந்த மிக கடுமையான மழை அங்கு பெய்ய வாய்ப்புள்ளது. மெரினா, பெசன்ட் பகுதிகளில் மிக கடுமையான காற்று வீச வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். சென்ற முறை கஜா புயல் வந்த போது, அந்த புயல் ராமநாதபுரம் அருகே கரையை கடக்கும் என்று கூறினார்கள். ஆனால் கஜா புயல் யாரும் எதிர்பார்க்காத வகையில் டெல்டா மாவட்டங்கள் பக்கம் சென்றது. பட்டுக்கோட்டை, தஞ்சையை சூறையாடிய பின்பே கரையை கடந்தது. அதேபோல் இதுவும் கூட வழி மாற வாய்ப்புள்ளது. அந்த புயலை போலவே இதுவும் வேறு பகுதியில் வழி மாறி சென்று கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். அதனால்தான் தற்போது முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுக்க ரெட் அலர்ட் விடப்பட்டு இருக்கிறது. புயல் எங்கு கரையை கடக்கும் என்று தெரியாததால் இந்த அலர்ட் விடப்பட்டுள்ளது.


THANKS ONE INDIA TAMIL


Top Post Ad

Below Post Ad