வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து 30-ம் தேதி ஆந்திர பகுதியை நோக்கி செல்ல இருக்கிறது.
நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த மண்டலம் தற்போது வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ஃபானி என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஃபானி புயல் தமிழக கடற்கரையில் இருந்து தற்போது 400 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
முன்னதாக 30-ம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தற்போதைய புயல் திசைமாற வாய்ப்பு இருப்பதால், தமிழகத்தை புயல் நெருங்குவதற்கான வாய்ப்பும் குறைவாக இருப்பதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனால் புயல் குறித்து தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதேசமயம் இந்தப் புயலால் மழை வருமா..? வராதா என்பது புயல் நகர்வை பொருத்தே தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
மேலும் புதிதாக உருவாக இருக்கும் புயல் தமிழகத்தை தாக்காது என்று பிரபல வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் இதுகுறித்து கூறும்போது, புயல் ஒருவேளை தமிழகத்தை நெருங்கி வந்தால் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் புயல் விலகி சென்றுவிட்டால் நிலப்பரப்பின் ஈரப்பதம் வெகுவாக குறைந்து தமிழகத்தில் கடுமையான அனல் காற்று வீசும் எனக் கூறியுள்ளார். இருப்பினும் அந்த நிலவரம் புயல் நகர்வை பொருத்து நாளையே தெரியவரும் எனக் கூறியுள்ளார்