Type Here to Get Search Results !

ISRO: ராக்கெட் ஏவுகணையை நேரடியாகப் பார்க்க எப்படி முன்பதிவு செய்வது?

ISRO: ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளை பொது மக்கள் நேரடியாகப் பார்க்கும் படி அரங்கு அமைக்கப்பட்டிருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட போது, பொதுமக்கள் அதனை கண்டு மகிழ்ந்தனர். 5000 பேர் அமர்ந்துப் பார்க்கக் கூடிய வகையில் இதற்கான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. சரி அடுத்து வரும் ராக்கெட் லாஞ்சை எவ்வாறு நேரடியாகப் பார்ப்பது என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். கவலையை விடுங்கள். அதற்கு எப்படி முன்பதிவு செய்ய வேண்டுமென நாங்கள் சொல்கிறோம். எப்படி முன்பதிவு செய்வது? அடுத்த ராக்கெட் லாஞ்சின் போது இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ தளத்துக்கு சென்று அப்ளை செய்யவும். அரசு அங்கீகாரம் பெற்ற ஆதார் கார்டு, பேன் கார்டு போன்ற அடையாள அட்டை மற்றும் எத்தனைப் பேர் போகிறீர்கள் என்பதைப் பற்றி குறிப்பிடவும். ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 18 கிலோ மீட்டரில் சூலூர் பேட்டை உள்ளது. இங்கு பஸ், மற்றும் டிரெயின் வசதி உண்டு.


Top Post Ad

Below Post Ad