Type Here to Get Search Results !

சந்தையில் புதிய வரவு ரெட்மி நோட் 7 எஸ் ப்ரோ: சிறப்பம்சங்கள் என்ன?

 ரெட்மி நிறுவனம் நோட் 7 வரிசையில் ரெட்மி நோட் 7 எஸ் ப்ரோ என்ற மாடலை மே 20-ம் தேதி வெளியிட்டது. சீனாவில் நோட் 7 ஆக வெளியிட்ட இந்த செல்போனை இந்தியாவில் ரெட்மி நோட் 7 எஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியிடபட்டுள்ளது.

இந்த செல்போன் வரும் மே 23-ம் தேதி ரெட்மி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்திலும், ஃபிளிப்கார்ட் மற்றும் எம்.ஐ. சார்ந்த நிறுவனங்களிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு அளவு மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவு ஆகிய இரண்டு வகைகளில் ரெட்மி நோட் 7 எஸ் ப்ரோ வெளியாகவுள்ளது.

ரெட்மி நோட் 7 எஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்:

டிஸ்பிளே: 6.3 இன்ச்

* டாட் நாட்ச் டிஸ்பிளே (செல்போன் முழுவதுமே டிஸ்பிளே இருக்கும்)

* போன் முன்புறம் மற்றும் பின்புறம் கொரில்லா கிளாஸ் 5 பொருத்தப்பட்டுள்ளது. (இதனால் போன் கீழே விழுந்தால் உடையும் வாய்ப்பு குறைவு).

வகை-1 32 ஜிபி மெமரி

டிஸ்பிளே:  19.5:9 திரை விகிதம், 1080 x 2340 பிக்சல்

3 ஜிபி ரேம் + 32 ஜிபி வரை சேமிப்பு வசதி விலை- ரூ. 10,999 (256 ஜிபி வரை சேமிப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம்

வகை-2 64 ஜிபி மெமரி

டிஸ்பிளே:  19.5:9 திரை விகிதம், 1080 x 2340 பிக்சல்

4 ஜிபி ரேம் + 64 ஜிபி வரை சேமிப்பு வசதி விலை- ரூ. 12,999 (256 ஜிபி வரை சேமிப்பை அதிகப்படுதிக்கொள்ளலாம்).

கேமராக்கள் : பின்புற கேமரா - முதன்மை கேமரா 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் 2 கேமராக்கள், முன்புறம் செல்ஃபி கேமரா - 13 மெகாபிக்சல்

பேட்டரி: 4000-MAh (இரண்டு நாள் தாங்கும் வசதி) டைப்-C சார்ஜர் போர்டு.

ஹெட்போன் ஜாக்: 3.5mm

செயலி: ஆக்டா-கோர் குவல்கோம், ஸ்னேப்ட்ராகன், 660 எஸ் ஓ சி ப்ராசஸர்

வண்ணங்கள்: கருப்பு , ப்ளூ மற்றும் சிவப்பு (Ruby Red, Onyx Black, Sapphire Blue.

குறைந்த விலையில் கிடைக்கும் இத்தகைய  போன்களை ரெட்மி நிறுவனம் அனைவரும் வாங்கும் விலைக்கு விற்பனை செய்தாலும், அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விற்பனை செய்வதில்லை என்ற குறைபாடு உள்ளது.

ஆன்லைனில் சில மணி நேரங்களே கிடைக்கும் பிளாஷ் சேல் என்ற பெயரிலும் மற்றும் எம்.ஐ ஷோரூமிலும் விற்பனை செய்கிறார்கள்.


Top Post Ad

Below Post Ad