ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் அவுட்டாகி சென்று கொண்டிருக்க மறு முனையில் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் நிலையாக நின்று அடித்து ஆடினார்.
அவர் இறுதிக் கட்டங்களில் ரன்கள் ஓடும் பொழுது மெதுவாக ஓடியது அனைவருக்கும் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனால் அவர் வயதான வீரர் என்பதால் அவ்வளவு தான் ஓட முடியும் என்று அனைவரும் நினைத்து இருக்க கூடம். ஆனால் அவருக்கு ரன் ஓடும் போது டைவ் அடித்ததில் காலில் சதைகள் கிழிந்து இருந்தது தெரியவந்துள்ளது. அவர் இதனை யாரிடமும் ஆட்டம் முடியும் வரை சொல்லாமலேயே தொடர்ந்து ஆட்டத்தில் தொடர்ந்துள்ளார்.
அந்த காயங்களுடன் தான் ரத்தம் சொட்ட சொட்ட, ரத்தம் வழியும் அளவிற்கு அவர் அணிந்திருந்த மஞ்சள் ஆடையானது சிவப்பு நிறமாக மாறும் அளவிற்கு ரத்தம் வெளி வந்த பிறகும் அவர் ஆட்டத்தினை தொடர்ந்துள்ளார். அவர் மலிங்கா, பாண்டியா ஓவர்களில் சிக்ஸர்கள் அடிக்கும் போது அவருடைய காலை பார்க்கும் போது ரத்தம் முழுவதும் வெளியேறி ஆடை நனைந்து இருந்தது தெரியவந்துள்ளது.
ஆட்டம் முடிந்து சென்ற பிறகுதான் அவருக்கு காயம் ஏற்பட்டது பற்றி மற்றவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதுவரை வெளிவராத இந்த தகவலை சென்னை வீரர் ஹர்பஜன் சிங் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதேபோல அவருக்கு ஆறு தையல்கள் போடப்பட்டு உள்ளது. சென்னை அணியின் தோல்வியினை தவிர்க்க அவர் போராடிய விதம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
தற்போது வாட்சனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது