மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இதில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்தது.
இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது சில வட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது .இதனால் ட்விட்டரில் இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் # StopHindiImposition ,# TNAgainstHindiImpositionஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது.மேலும் உலக அளவில் # StopHindiImpositionஎன்ற ஹேஷ்டேக் மூன்றாம் இடத்திலும், # TNAgainstHindiImposition என்ற ஹேஷ்டேக் 6-வது இடத்திலும் ட்ரெண்டாகி வருகின்றது.