சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையிலும் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. ஏற்கனவே, ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளது. நம்பர் 1 ஐசிசி சார்பில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா 51 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியதில் 6 ஆயிரத்தி 266 புள்ளிகளை பெற்றுள்ளது. ரேட்டிங்கிலும் 123 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது இந்திய அணி.2வது இடத்தில் 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 ஆயிரத்தி 84 புள்ளிகளை பெற்று , இங்கிலாந்து அணி, தரவரிசையில் 122 மதிப்பெண்களுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளது.
3வது மற்றும் 4வது இடங்களில் முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன. டெஸ்ட் தரவரிசை ஏற்கனவே கடந்த மே 2ம் தேதி ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில், 32 போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி 3 ஆயிரத்தி 631 புள்ளிகளைப் பெற்று 113 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்திருந்தது. அதில் 23 போட்டிகளில் பங்கேற்ற நியூசிலாந்து அணி 2 ஆயிரத்தி 547 புள்ளிகளுடன், 111 மதிப்பெண்களுடன் 2வது இடத்தை பெற்றது. கோஹ்லி நம்பர் 1 விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடம் பெற்றுள்ளதை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி உள்ளனர்.பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.