Type Here to Get Search Results !

ரயில் சேவையில் இன்று மாற்றம்



மூர் மார்க்கெட் வளாகம்-வில்லிவாக்கம் இடையே பொறியியல் பணி நடப்பதால், ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்படும் ரயில்கள்: மூர்மார்க்கெட் வளாகம்- திருவள்ளூருக்கு காலை 9.45, முற்பகல் 11.30, நண்பகல் 12.10, மதியம் 1.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சென்னை கடற்கரை-திருவள்ளூருக்கு மதியம் 1.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூர்மார்க்கெட் வளாகம் -ஆவடிக்கு காலை 10.05, 10.15, 10.45, நண்பகல் 12.35 ஆகிய நேரங்களில் மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. மூர்மார்க்கெட் வளாகம்-கடம்பத்தூருக்கு காலை 10.30, நண்பகல் 12 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. மூர்மார்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு முற்பகல் 11.05, நண்பகல் 12.50, மதியம் 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. சென்னை கடற்கரை-திருத்தணிக்கு நண்பகல் 12.10 இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுதவிர, சில ரயில்கள் ரத்துசெய்யப்படுள்ளன. இதுபோல, மறுமார்க்கமாக வரும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சில ரயில்கள் பகுதி அளவில் ரத்து செய்யப்படுகின்றன.


சிறப்பு ரயில்கள்: பயணிகள் வசதிக்காக 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. திருத்தணி-அரக்கோணத்துக்கு காலை 8.50 மணிக்கும், மூர்மார்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு காலை 9.45 மணிக்கும், அரக்கோணம்-திருத்தணிக்கு முற்பகல் முற்பகல் 11.55 மணிக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

Top Post Ad

Below Post Ad