*முன்புறம் நீல நிறத்திலும், பின்புறம் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது*
*ஆரஞ்சு நிறம் இருப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் ஜெர்சியின் வடிவத்தை பிசிசிஐ வெளியிட்டது*
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியுடன் விளையாடும்போது இந்திய வீரர்கள் அணியவுள்ள புதிய ஜெர்ஸியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஆரஞ்சு, புளு நிறங்களில் புதிய ஜெர்ஸி தயாரிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் புதிய விதிகளின்படி இரு அணிகளின் ஜெர்ஸி ஒரேபோல் இருந்தால் வெளிநாட்டு அணி வேறு கலரில் ஜெர்ஸி அணிய வேண்டும்.