நாடு முழுவதும் வருகிற 17ம் தேதி அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி 6 மணி நேரத்திற்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட உள்ளது. மேலும் 17ம் தேதி புது கணக்கு தொடங்கும் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி 16ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணிவரை கோயில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.
அன்று 12 மணிக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சந்திர கிரகணத்தையொட்டி அன்று மாலை 6 மணிக்கு நடை அடைக்கப்படும். 16ம் தேதி மதியம் 12 மணி முதல் 5 மணி நேரம் மட்டுமே இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர். மற்ற எந்த தரிசனத்துக்கும் அனுமதி இல்லை. 17ல்மதியம் 12 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.