பான் எண் உடன் ஆதார் எண்ணைஇணைப்பது டிச.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து இருப்பதாவது: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் செப்.,30ம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால கெடுவை வரும் டிச.,31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.