Type Here to Get Search Results !

பொறியாளர் தினம்.இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?


கட்டுமானப் பொறியாளரும், பாரத் ரத்னா விருது பெற்றவருமான விஸ்வேஷ்வரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஐ இந்தியா முழுவதும் ஒவ்வொரு வருடமும் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து இன்று ட்விட்டரில் #EngineersDay #EngineeringInspiration என்ற ஹேஷ்டகுகள் பிரபலமாகி வருகின்றன.


இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரியான ஐஐடி ரூர்க்கீ, பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. 1837-38 ஆண்டுகளில், ஆக்ராவில் கடும் பஞ்சம் ஏற்பட்டு, அதிலிருந்து விடுபட எண்ணி, அப்போது இந்தியாவை ஆண்டுக் கொண்டிருந்த கிழக்கு இந்திய கம்பெனி, மீரட்டிலிருந்து ஆக்ராவிற்கு நிர்பாசன வசதி அமைக்க முடிவு செய்தது.

அதற்கு உள்ளூர் மக்களின் உதவியும் வேண்டும் என்பதை உணர்ந்த கர்னல் கௌட்லி, லெப்டினன்ட் ஜேம்ஸ் தோமாசனின் உதவியுடன் சஹாரான்பூரில் ஒரு சிறு கூடாரம் அமைத்து அங்குள்ள மக்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.

பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக வளர தொடங்கியதும், ஜேம்ஸ் தோமாசின் அறிவுரையின் படி சஹாரான்பூரிலிருந்து ரூர்க்கியிற்கு பயிற்சி இடத்தை மாற்றினர்.
சிறு கட்டிடமாக கட்டப்பட்ட ஐஐடி ரூர்க்கீ இன்று 365 ஏக்கர் பரப்பளவில் பெரிய கட்டிடமாக வளர்ந்து நிற்கிறது.

இப்போது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை கிண்டியில் இருக்கும் பொறியியல் கல்லூரி 1794 - ல் தொடங்கப்பட்ட போது கணக்கெடுப்பு பள்ளியாகவே தொடங்கப்பட்டு, 1859 - ன் பின்னரே மெட்ராஸ் பல்கலைகழகத்தின் கட்டிட பொறியியல் கல்லூரியாக மாற்றியமைக்கப்பட்டது. எனவே, ஐஐடி ரூர்க்கீயே இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரியாகும்.முதலில் வெறும் 3 துறைகளைக் கொண்டே தொடங்கப்பட்ட ஐஐடி ரூர்க்கீ, தற்போது 22 துறைகளை கொண்டுள்ளது. மேலும் ஒரு துறைக்கு 10 - 15 மாணவர்களையே கொண்டிருந்தது, இன்று பல்லாயிரம் மாணவர்கள் பயிலும் இடமாக திகழ்கிறது.

ஐஐடி தொடங்கிய காலத்தில், மாணவர்களுக்கு உதவித்தொகையாக ரூ. 5 முதல் ரூ. 10 வரை வழங்கப்பட்டது. இன்று மகாத்மா காந்தி மத்திய நூலகமாக அழைக்கப்பட்டு வரும் அந்த நூலகத்தில் அரிதாக கிடைக்கப்படும் புத்தகங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியா வின் முதல் பொறியியல் கல்லூரி என்ற பெருமை மட்டுமல்லாது, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பக்ரானங்கள் அணை உட்பட பல அணைகள் இக்கல்லூரியின் மாணவர்களாலேயே தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Top Post Ad

Below Post Ad