தமிழகத்தில் வரும் 21,22ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் அறிவிப்பில் மேலும், ‘காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கும், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம், விழுப்புரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் காற்று பலமாக வீசும் என்பதால் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதனையொட்டியுள்ள கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அக்டோபர் மாதம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சராசரி மழை அளவில் 8 சதவீதம் கிடைத்துள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.