Type Here to Get Search Results !

வயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மறையணுமா? அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...

ஒருவரது உடல் எடையைக் குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன. பலர் இந்த உணவுகளை சாப்பிட்டால் எடை குறையும், இதைக் குடித்தால் எடை குறையும் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அது வெறும் கட்டுக்கதை அல்ல. உண்மையிலேயே அவற்றில் உடல் எடையைக் குறைக்கும் பண்புகள் நிரம்பியுள்ளது. அப்படி ஒருவரது உடல் பருமனுக்கு காரணமான கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கும் ஓரு சுவையான ரெசிபி தான் கேரட் தக்காளி சூப். இனிப்பான கேரட் மற்றும புளிப்பான தக்காளி என இரண்டும் ஒன்று சேரும் போது, நிச்சயம் அந்த சூப் அற்புதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது ஒரு சுவையான உணவுப் பொருளும் கூட. பல்வேறு ஆய்வுகளில் கேரட் மற்றும் தக்காளி உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அவற்றில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் அதிகளவிலான அழற்சி எதிர்ப்பு பண்புகளும் தான் காரணம்.

உடல் பருமனால் கஷ்டப்படுவோருக்காக கெட்ட கொழுப்பைக் கரைக்கும் கேரட் தக்காளி சூப்பின் செய்முறை மற்றும் அது எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பது குறித்து தெளிவாக கொடுத்துள்ளது.

ஏன் கேரட் மற்றும் தக்காளி சூப் குடிக்க வேண்டும்? கேரட் தக்காளி சூப் குடிப்பதால் உடல் எடை மட்டும் குறைவதில்லை. அத்துடன் உடலின் மெட்டபாலிசம் மேம்படும், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைந்து, பல்வேறு நோய்த் தாக்குதலில் இருந்து உடல் பாதுகாப்புடன் இருக்கும். மேலும் இந்த சூப் உடல் எடையைக் குறைப்பதற்கு மற்றொரு காரணம், பசியைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கச் செய்யும். இதனால் கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறையும். இப்போது அந்த சுவையான கேரட் தக்காளி சூப்பை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.
அழிக்கும் என்று தெரியுமா? தேவையான பொருட்கள்: * கேரட் - 1 (பொடியாக நறுக்கியது) * தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) * வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) * பூண்டு பற்கள் - 3-4 (தட்டிக் கொள்ளவும்) * மிளகுத் தூள் - தேவையான அளவு * உப்பு - சுவைக்கேற்ப * கொத்தமல்லி - அலங்கரிக்க தயாரிக்கும் முறை: * ஒரு வாணலியில் 2 கப் நீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் போட்டு, சிறிது உப்பு சேர்த்து மிதமான தீயில் குறைந்தது 30 நிமிடம் வேக வைக்க வேண்டும். * காய்கறிகள் நன்கு மென்மையாக வெந்ததும், அடுப்பை அணைத்து வாணலியை இறக்கி குளிர வைக்க வேண்டும். * பின்பு வாணலியில் உள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். * பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடேற்ற வேண்டும். * இறுதியில் அரைத்து வைத்துள்ளதை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து, தேவையான அளவு மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்தால், கேரட் தக்காளி சூப் தயார். கீழே ஏன் கேரட் தக்காளி சூப் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பதற்கான சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


காரணம் #1 சுவையான கேரட் தக்காளி சூப் செய்வற்கு 40-45 நிமிடங்களை எடுத்துக் கொண்டாலும், உடலுக்கு ஆரோக்கியமானது. அதே சமயம் இந்த சூப்பில் க்ரீம் எதுவும் சேர்க்கப்படாமல் இருப்பதால், அதிகப்படியான கலோரிகளும் இருக்காது. மேலும் இந்த சூப்பில் உடலின் உள்ளே வெப்பத்தைத் தூண்டி கொழுப்பைக் கரைக்கும் மிளகு சேர்க்கப்படுகிறது.

காரணம் #2 கேரட் தக்காளி சூப் ஆரோக்கியமான எண்ணெயான ஆலிவ் ஆயில் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் இதில் கலோரிகள் குறைவான காய்கறிகளைக் கொண்டுள்ளதால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் சிறப்பான சூப். ஒருவரது உடல் எடையைக் குறைப்பதற்கு முயற்சி எடுக்கும் போது, அதில் மிகவும் முக்கியமான ஒன்று உண்ணும் உணவுகளில் கலோரிகள் குறைவாக இருக்க வேண்டியது. அத்தகைய கலோரி இந்த சூப்பில் மிகவும் குறைவு.

காரணம் #3 தக்காளி மற்றும் கேரட் சூப்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எடையைக் குறைக்க வேண்டுமானால் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். எனவே தான் இந்த சூப் எடையைக் குறைக்க உதவும் சிறப்பான சூப்பாக கருதப்படுகிறது.

காரணம் #4 கேரட் தக்காளி சூப் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உங்களை சுறுசுறுப்பாகவும், நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படவும் உதவும். அதிலும் இந்த சூப்பில் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளை சேர்த்துக் கொண்டால், இன்னும் ஆரோக்கியமான மற்றும் சுவையான பானமாக இருக்கும். இருப்பினும், எதிலும் அளவு மிகவும் முக்கியம். ஆகவே அளவுக்கு அதிகமாக இதைக் குடிக்காதீர்கள். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Top Post Ad

Below Post Ad