Type Here to Get Search Results !

தேவையில்லாத குழுக்களில் இணைவதை தவிர்க்க வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்!
















வாட்ஸ்அப் தளத்தில் க்ரூப் சாட் பயனாளர்களுக்கான அப்டேட் ஆக புதிய அப்டேட் வந்துள்ளது. தற்போதைய அம்சத்தை கூடுதலாக மெருகேற்றி தேவையில்லாத குழுக்களில் இணைவதைத் தவிர்க்க வாட்ஸ்அப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிய 'blacklist' அம்சத்தையும் அப்டேட் செய்துள்ளது வாட்ஸ்அப். க்ரூப் சாட்-களுக்காக 'My Contacts Except' என்னும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் உள்ள ஒரு குழுவில் இணைய பயனாளர்கள், 'Everyone', 'My Contacts' மற்றும் 'Nobody' ஆகிய அம்சங்களுள் ஏதேணும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

இதில் யார் வேண்டுமானாலும் உங்களை ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைக்கலாம் என்றால் Everyone அம்சம், உங்களது கான்டாக்ட்ஸ் பட்டியலில் இருப்போர் மட்டும் என்றால் My Contacts எனத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 'Nobody' என்னும் அம்சத்தைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு க்ரூப்-ல் இணைய invite வரும். ஆனால், மூன்று நாட்களில் அந்த அழைப்பு காலாவதி ஆகிவிடும். புதிய அப்டேட்டில் 'Nobody' என்னும் அம்சம் 'My Contacts Expect' என்று இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களுக்குத் தேவையில்லாதோரை நீங்கள் தேர்வு செய்து, அவர்கள் உங்களை ஒரு குழுவில் இணைக்க இயலாதவாறு ப்ளாக் செய்துகொள்ளலாம். இதன் மூலம் உங்களை நேரடியாக ஒரு குழுவில் இணைக்க முடியாது. உங்களுக்கு வரும் 'க்ரூப் இன்வைட்' மூலம் தேவையானவற்றில் நீங்கள் இணைந்துகொள்ளலாம்.

பீட்டா பயனாளர்களுக்கு இன்னும் இந்த அப்டேட் கொடுக்கப்படவில்லை. இவர்களுக்கும் விரைவில் இந்த அப்டேட் செயல்பாட்டுக்கு வரும்




Top Post Ad

Below Post Ad