பிரபல உணவு எழுத்தாளரும் பிரச்சாரக்காரருமான ஜாக் மன்றோ தனது வங்கி கணக்கிலிருந்து, தனது தொலைபேசி எண் மூலம் 5000 பவுண்டுகளை ( சுமார் இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 4.51 லட்சம் ரூபாய்) மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளார்.
அந்த அதிபுத்திசாலியான திருடன் அவரது தொலைபேசி எண்னை, தொலைப்பேசி எண் வழங்குனர்களிடமிருந்து போர்டிங்க் அங்கீகாரக் குறியீட்டை பெற்ற பிறகு, எழுத்தாளரின் தொலைபேசி எண்ணை புதிய சிம் கார்டுக்கு மாற்றியுள்ளார்.
மேலும் இந்த மொபைல் எண்ணினால், மன்றோவின் வங்கி கணக்கிலிருந்து பரிவர்த்தனை செய்யும் குறுசெய்திகளையும் அவர்களால் பெற முடிந்திருக்கிறது. இந்த செயல்முறையே சிம் ஜாகிங்க் என்றும் “simjacking” என்றும் அழைக்கப்படுகிறது.
பி.ஏ.சி மூலம் சிம் மாற்றம்
மேலும் அவரின் கார்டு சம்பந்தமான தகவல்கள் மற்றும் பேபால் தகவல்கள், ஆன்லைன் பரிவர்த்தனையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிகிறது என்றும் மன்றோ டிவிட்டரில் கூறியுள்ளார். மேலும் அவரது மொபைல் எண்ணும் பிஏசி செயல்பாட்டின் மூலம், ஒரு புதிய சிம்மிற்கு அனுப்பட்டது என்றும் கூறியுள்ளார். அதாவது திருடர்கள் மொபைல் நம்பரை மாற்றிய நிலையில், அதன் மூலம் பண பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கவும் செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
ஆறு மாத வருமானம் போச்சு
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்றோ, பிரபல உணவு எழுத்தாளரும் வறுமை பிரச்சாரக்காரருமான அவரது கடைசி ஆறு மாத வருவாயை ஆன்லைன் திருடர்கள் ஆட்டையை போட்டுவிட்டதாகவும், இதன் பின்னர் பெரிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது மன்றோ தனது எல்லா வங்கி கணக்குகளிலும் இரண்டு படி பாதுகாப்பு அங்கீகாரத்தைக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
தனது பணத்தை மீட்டெடுக்க முடியுமா?
ஒரே ஒரு டெக்ஸ்ட் மேசேஜ்ஜால் பறிபோன தனது பணத்தை திரும்ப பெற முடியுமா? ஏனெனில் தனது மொபைல் எண்ணை வைத்து அதன் மூலம் வரும் ஓடிபியை வைத்து பணபரிமாற்றம் நடந்திருக்கிறது என்றும், இது தனக்கு திரும்ப கிடைக்குமா என்றும் புலம்பியுள்ளார். மன்றோ மட்டும் அல்ல இன்று உலகம் முழுவதிலும் இது போன்ற பல பிரச்சனைகள் நடந்த வண்ணம் தான் உள்ளது. அதை எப்படி பற்றிய விழிப்புணர்வை மேலும் வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கை
இந்த நிலையில் தற்போது நான் எனது போபால் கணக்கை லாக் செய்துள்ளேன் என்றும், எனது வங்கி அட்டைகளையும் துண்டித்து கணக்குகளைத் தடுத்துள்ளேன் என்றும், எனது ஆன்லைன் வங்கி விவரங்கள் மற்றும் எனது பாதுகாப்பு கேள்விகள் அனைத்தையும் மாற்றியுள்ளேன என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் தற்போது வரை யாரோ ஒருவர் எப்படி எனது வங்கி மற்றும் மற்ற விவரங்களை எல்லாம் எப்படி பெற முடியும், அதன் மூலம் எப்படி எனது வங்கிக் கணக்கை செயல்படுத்த முடியும் என்று எனக்குள் நிறைய கேள்விகள் இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.