Type Here to Get Search Results !

சர்ச்சைக்குரிய குரூப்களைத் தடை செய்கிறது வாட்ஸ்அப்!


வாட்ஸ்அப்பில் சர்ச்சைக்குரிய வகையில் பெயர் வைக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குரூப்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது அந்த குரூப்களில் இருந்த நபர்களின் கணக்குகளும் முற்றிலுமாக தடை செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




இந்த விவகாரம் தொடர்பாக ரெட்டிட் இணையதளத்தில் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். மோவி11 என்ற பயனர் ஒருவர் தனது பதிவில், ‘எங்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு நபர் குரூப்பின் பெயரை மாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து குரூப்பில் இருந்த அனைவரது கணக்கும் முடக்கப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பின்னர்தான் எங்களால் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடிந்தது’ எனப் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக வாட்ஸ்அப் எந்தவித விளக்கமும் தரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





இந்த விவகாரம் ரெட்டிட் இணையதளத்தில் மாபெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பலர் இதை நண்பர்கள் செய்யும் பிராங் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக வாபீட்டா தளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வாபீட்டா தளமானது தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியின் அப்டேட் மற்றும் நடவடிக்கைகளை கண்காணித்துவரும் தளம். இதன் அறிக்கையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாட்ஸ்அப் குரூப்களின் மூலம் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு தொடர்பான செய்திகள் அதிகம் பகிரப்படுவதாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து புகார்கள் வந்தது.





இதையடுத்து சைபர் பீஸ் ஃபவுண்டேசன், வாட்ஸ்அப் குரூப்களில் ஆய்வு மேற்கொண்டது. இரண்டு வாரம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவில் பல்வேறு குரூப்கள் குழந்தைகள் பாலியல் வண்புணர்வை ஆதரிக்கும் வகையில் பெயர்களை வைத்திருப்பதாகவும், அதுதொடர்பான கருத்துக்கள் அதில் பகிரப்படுவதாகவும் வெளியிட்டது. இதில், பல்வேறு குரூப்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் ஐகானாக வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.





வாட்ஸ்அப்பில் எண்ட் டு எண்ட் என்கிரிப்சன் வசதி உள்ளதால் குரூப்களில் நடைபெறும் உரையாடல்களைக் கண்காணிக்க முடியாது. ஆனால், குரூப் பெயர்கள், யாரால், எப்போது உருவாக்கப்பட்டது, குரூப்களின் ஐகான்களைப் பார்க்கமுடியும். பார்க்க முடியும். குரூப்பின் பெயர்கள் சர்ச்சைக்குரிய விதத்தில் வைக்கப்பட்டிருந்தால் தன்னியல்பாகவே வாட்ஸ்அப் அவற்றை தடை செய்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad