Type Here to Get Search Results !

ஆடி மாதம் 32வது நாள், இது எப்படி என்பதை விஞ்ஞானத்துடன் தெரிந்து கொள்ளலாமே....



(How Indians predicted Astrophysics few thousand years ago and why Aadi has 32 Days)


 14.01.2020 மார்கழியின் கடைசி தேதி 29 தான். 30 இல்லை


ஆடி மாதம் 32 வது நாள், இது எப்படி என்பதை விஞ்ஞானத்துடன் விளக்கியுள்ளேன். 


ஆனால் இதை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் அறிவியல் என வார்த்தை கண்டுப் பிடிக்கும் முன்பே இதை துல்லியமாய் கணித்துள்ளனர் – இது எப்படி ?


ஒவ்வொரு ராசியும் சரிசமமான டிகிரி அளவுடைய பாகங்களாக இருந்தாலும் தமிழ் மாதங்களின் கால அளவு சமமாக இருப்பதில்லை. மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகியவை 31 நாட்கள் கொண்டவை. 


சில சமயம் ஆனியும், ஆடியும் 32 நாட்கள்; புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை -30 நாட்கள். மார்கழி – 29+ நாட்கள். ஏன் இப்படி?


தமிழ் மாதத்தின் கால அளவு சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தில் ஏற்படக் கூடிய வேறுபாட்டை யும் பொறுத்தது. 


சூரியனை பூமி சுற்றி வரும் பாதை ஒரு செவ்வையான வட்டப்பாதையும் அல்ல. Ellipse எனப்படும் நீள் வட்டம். 


சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு சமயம் கிட்டத்தில் இருக்கும் – டிசம்பர்/மார்கழியில். 


அந்த இடத்திலிருந்து 180 டிகிரி தள்ளி அதிக தூரத்துக்குச் சென்றுவிடும், ஜூலை/ஆடியில். Perigee, Apogee என்று இவற்றைச் சொல்வார்கள். 


சூரியன்/பூமி இடையிலுள்ள அந்த தூரம் குறைந்தால் பூமியின் வட்டப்பாதையில் 30 டிகிரியின் நீளமும் குறையும். 


சூரியனின் ஈர்ப்பு சக்தியால் பூமியின் Centripetal Force-இல் ஏற்படும் மாறுதல்களாலும் பூமியின் வேகமும் அதிகரிக்கும்.


குறைந்த தூரத்தை அதிக வேகத்தில் கடக்கும்போது அதற்காக பூமி எடுத்துக்கொள்ளும் கால அளவும் குறையும். 


சூரியனிலிருந்து பூமியின் தூரம் அதிகரிக்கும்போது 30 டிகிரியின் தூரமும் கூடும்.


 பூமியின் Centripetal Force குறைந்து பூமியின் வேகமும் குறையும். 


அப்பொழுது சூரியன் அந்த குறிப்பிட்ட ராசியைக் கடக்கும் தூரமும் அதிகரிக்கும்.


 அதற்குரிய கால அளவும் கூடும். 


ஆகையால்தான் மார்கழி மாதம் 29 நாட்களையும் ஆடி மாதம் 32 நாட்களையும் கொண்டதாக இருக்கின்றன.


இந்தக் கணக்குக்கு என்று விசேட பார்முலாக்களைக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். 


ஒவ்வொரு வருடமும் எந்தக் கிழமையில் பிறக்கிறதோ அதற்கு அடுத்த கிழமையிலும், எந்தத் திதியில் பிறந்ததோ அதற்கு 12-வது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு 11-வது நட்சத்திரத்திலும், 15 நாழிகை 31 விநாடிகள் கழித்தும் பிறக்கும் என்பதை சிம்பிளாக கண்டறிந்தவர்கள் நம் மூதாதையர்கள்.


தமிழ் ஆண்டுகளில் உள்ள மாதங்களைப் பழங்காலத்தில் ‘ஞாயிறு’ என்றே அழைத்தார்கள். மேஷ ராசியில் சூரியன் இருக்கும் மாதத்தை மேட ஞாயிறு என்றே அழைத்தார்கள். 


சந்திரனை அடிப்படை யாகக் கொண்டதொரு கணக்கும் இருந்தது.


ஒரு அமாவாசையிலிருந்து மறு அமாவாசை வரையுள்ள 29 நாட்களும் சில்லறையும் கொண்டது சாந்திரமான மாதமாகும். சந்திரனை அடிப்படையாகக் கொண்டது இது என்றேன். 


சாந்திரமான மாதங்கள் 12 கொண்டது சாந்திரமான வருடம். இது Lunar Year எனப்படும். 354-நாட்களும் சில்லறையும் கொண்டது. 


அந்தந்த மாதங்களில் வரும் பெளர்ணமி எந்த நட்சத்திரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதோ அந்த நட்சத்திரத்தின் பெயரால் அந்தந்த மாதம் அழைக்கப்படுகிறது. 


சித்திரை நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் மாதம் சித்திரை. 


சூரியன் மேட ராசியில் சஞ்சரிக்கும் போது சித்திரை நட்சத்திரம் சூரியனுக்கு எதிர் திசையில் இருக்கும். 


அந்த நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் போது சூரியனிலிருந்து 180 டிகிரி தள்ளி எதிர் திசையில் சந்திரன் இருக்கும். ஆகவே பெளர்ணமி ஏற்படுகிறது. இதையே சித்திரா பெளர்ணமி என்று கூறுகிறார்கள்.

 

ஆகவே சூரியன் மேட ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகிய மேட ஞாயிறும், சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் பூரணமாகத் திகழும் சித்திரை மாதமும் ஒரே சமயத்தில் ஏற்படும். 


ஆனால் பிற் காலத்தில் மேட ஞாயிறைச் சித்திரை மாதம் என்று மட்டும் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. மேட ஞாயிறு என்று யாரும் சொல்வதில்லை. 


சாந்திரமானப் பெயரைக் கொண்டு அழைக்கிறோம். 


இவற்றுடன் நட்சத்திரமானக் கணக்கும் இருக்கிறது. 


ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியின்போது சந்திரன் நிற்கும் நட்சத்திரம் அதற்கு அடிப்படை. இதனை Sideral கணக்கு என்பார்கள். 


இந்த அடிப்படையில் உள்ள ஆண்டை Sidereal Year என்று அழைக்கப்படும்.


வாட்ஸ் அப் பகிர்வு


Tags

Top Post Ad

Below Post Ad