Type Here to Get Search Results !

ஆதார் டவுன்லோடு செய்ய புதுமுறை: முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி


இந்தியாவில் அனைத்து பணிகளுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பிறந்த குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரையில் அனைத்து வயதினருக்கும் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது.

இதற்காக நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்படுகிறது.

தபால் அலுவலகங்களிலும் ஆதார் சேவை மையங்கள் இயங்கி வருகிறது. ரேஷன் கார்டு தொடங்கி, வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு, அரசின் மானியங்கள் உட்பட அனைத்து வகையான அரசு சார்ந்த திட்டங்களில் பயன்பெறுவதற்கு ஆதார் எண் தேவைப்படுகிறது.

இந்த ஆதார் கார்டினை பெறுவதற்கு கண் கருவிழி, கைரேகை, கைவிரல் ரேகை உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகிறது. தனிமனிதனின் அனைத்து வகையான ஆவணங்களுடன் ஆதார் இணைக்கப்படுகிறது.

இதனால் ஆதார் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியதாக உள்ளது. இருப்பினும் பலரது ஆதார் விவரங்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளியானது.
முன்பு ஆதார் கார்டு எண், செல்போன் எண் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆதார் டவுன்லோடு செய்து கொள்ளும் வசதி இருந்தது. ஆனால் தற்போது ஆதார் கார்டு மேலும் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் ஆன்லைனில் ஆதார் டவுன்லோடு செய்ய வேண்டுமானால் சம்மந்தப்பட்ட நபரின் பேஸ் ரெகக்னைஸ் (பேஸ் லாக்) பதிவு செய்யவேண்டும். பின்னர்தான் டவுன்லோடு செய்ய முடியும். இதுதவிர, ஆதார் குறித்த தகவல்கள் திருடப்படாமல் இருக்க பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆதார் பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


பிழை திருத்த புது யுக்தி
ஆதார் கார்டில் மிக முக்கிய பிழையாக தந்தை பெயர் என்பதற்கு பதிலாக கணவன் பெயர் என்றும் கணவன் பெயருக்கு பதிலாக தந்தை பெயர் என்றும் பாதுகாவலர் என்பதற்கு பதிலாக தந்தை பெயர் என்றும் மாற்றி அச்சிடப்படுகிறது. இந்த பிழையை தவிர்க்க இனி வழங்கப்படும் ஆதார் அனைத்துக்கும் காடியன் ஆப் என்று மட்டுமே சாப்ட்வேரில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad