Type Here to Get Search Results !

வீடு வீடாக சென்று பாடம் நடத்தும் சிறுமி... 12 வயதில் ஆசிரியராக சேவை!

கொரோனா ஊரடங்கால், பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு, 12 வயது சிறுமி ஒருவர் அவர்களின் வீடுகளுக்கு தேடி சென்று பாடம் நடத்தி வரும் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அட்மிடா எனும் ஊரை சேர்ந்தவர் 12 வயதாகும் சிறுமி ரீம் எல் கவ்லி (( Reem El-Khouly )). கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், ஆசிரியராய் மாறிய ரீம் எல் கவ்லி, 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார். ரீம் எல் கவ்லியின் இந்த முயற்சி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இதுகுறித்து ரீம், ‘‘தெருக்களில் விளையாடுவதற்கு பதில், பாடம் கற்றுத்தந்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். அதன்படி, காலையில் எழுத்து பிரார்த்தனை செய்த பின், அவர்களுக்கு வகுப்பு எடுக்க துவங்குகிறேன். அரபு, கணக்கு, ஆங்கிலப் பாடங்களை அவர்களுக்கு கற்பிக்கிறேன்” என்று கூறினார்.


முதலில், நோட்புக் மூலம் சிறுமி ரீம் பாடம் எடுக்க துவங்கியிருக்கிறார். பின் கரும்பலகையில் எடுத்திருக்கிறார். இவரது சேவை குறித்து கேள்விப்பட்ட உள்ளூர் தொண்டு நிறுவனம் ஒன்று, தற்போது அவருக்கு ஒரு வெள்ளை போர்டையும், மார்க்கர்களையும் வழங்கியிருக்கிறது. ரீம் தனது மாணவர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.
பள்ளிகள் மூடப்பட்டதும், பள்ளியில் நாங்கள் கற்றுக்கொண்டதை மறந்துவிடக் கூடாது என்பதற்காக ரீம் எங்களுக்கு பாடம் எடுக்க தொடங்கினார். நாங்கள் அவரை மிகவும் நேசிக்கிறோம்.  எளிமையான வகையில் அனைவருக்கும் புரியும்படி ரீம் பாடம் நடத்துவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.  
ரீம்மின் இந்த சேவை உலகில் உள்ள பிரபல ஊடகங்கள், நாளிதழ்களில் வெளியாகி அவரை பிரபலம் ஆக்கி உள்ளது. சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த செய்திகள் பரவ, நெட்டிசன்களும் தங்களது வாழ்த்தக்களை தெரிவித்து வருகின்றனர். 

Top Post Ad

Below Post Ad