Type Here to Get Search Results !

ஒரு டோசேஜ் ரூ.995-க்கு விற்பனை: இந்தியாவில் களமிறங்கும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி


ரஷ்யாவில் கண்டறியப்பட்ட கொரோனா தடுப்பூசியான 'ஸ்புட்னிக்-வி' அடுத்த வாரம் முதல் இந்தியாவில் விநியோகிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான விலையும் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசியில், 91.6 சதவிகிதம் கொரோனாவை தடுக்கும் செயல்திறன் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த தடுப்பூசி விநியோகிக்கப்படுமென சொல்லப்பட்டுள்ள நிலையில், இதன் ஒரு டோசேஜ், 5 சதவிகித ஜி.எஸ்.டி. உட்பட இந்தியாவில் ரூ.995.40 க்கு விற்கப்படும் என, இதை இந்தியாவில் விரைவில் தயாரிக்கவிருக்கும் டாக்டர் ரெட்டி ஆய்வகம் இன்று கூறியுள்ளது. 

உலகளவில், பைசர் மற்றும் மாடெர்னா தடுப்பூசிகளுக்குப் பிறகு, அதிக விலையில் விற்கப்படுவது 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசிதான். இரண்டு டோசேஜ்ஜாக அளிக்கப்படும் இந்த தடுப்பூசியை, இதுவரை உலகளவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இப்போதைக்கு இந்த தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டுதான் விநியோகிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திலிருந்து, டாக்டர் ரெட்டி ஆய்வகம் இதன் உற்பத்தியை உள்நாட்டிலேயே தொடங்கும் என சொல்லப்பட்டுள்ளது. அப்படி தொடங்கப்பட்டபின், தடுப்பூசியின் விலை குறையும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டிலேயே முதன் முறையாக, 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசி ஐதரபாத்தில் சிலருக்கு முதற்கட்டமாக இன்று போடப்பட்டுள்ளது."

Top Post Ad

Below Post Ad