Type Here to Get Search Results !

நீங்கள் இஎம்ஐ செலுத்துபவரா? ‘ஆட்டோ டெபிட்’ முறைக்கு புதிய கட்டுப்பாடு



கடன் தவணைத் தொகையை வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே எடுத்துக் கொள்ளும் ‘ஆட்டோ டெபிட்’ முறைக்கு இன்றுமுதல் இந்திய ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

பொதுவாக மக்களின் அன்றாட பணிகளுக்கு இடையே மாத மாதம் கட்ட வேண்டிய வீட்டுக் கடன், வாகனக் கடன், மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம், மின்சாரக் கட்டணம், செல்லிடப்பேசிக் கட்டணம், ஓடிடி கட்டணம் என பல்வேறு கட்டணங்களை குறிப்பிட்ட நிறுவனங்கள் குறிப்பிட்ட தேதிகளில் நமது வங்கிக் கணக்குகளிலிருந்து எடுத்துக் கொள்ள பெரும்பாலானோர் அனுமதி அளித்துள்ளனர்.

இந்நிலையில், நவீன உலகில் மக்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் முறைக்கேடாக பணத்தை எடுக்கும் அபாயம் உருவானதால் ‘ஆட்டோ டெபிட்’ முறைக்கு புதிய கட்டுப்பாட்டை கடந்தாண்டு ரிசர்வ் வங்கி உருவாக்கியது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 2021 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதென்ன புதிய கட்டுப்பாடுகள்?

இவ்வளவு நாள் குறிப்பிட்ட தேதிகளில் வாடிக்கையாளர்களிடம் கேட்காமலேயே வங்கிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மாத தவணையை எடுத்து வந்தனர். ஆனால், இனிமேல் அவ்வாறு எடுக்க முடியாது.

இந்த புதிய முறையின் படி ஆட்டோ டெபிட் மூலம் பணத்தை ஒரு நிறுவனத்திற்கு வங்கிகள் செலுத்துவதற்கு முன்னர் 5 நாள்களுக்கு முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பவேண்டும். அதை பார்த்துவிட்டு வாடிக்கையாளர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். அதுவும் ரூ. 5,000-க்கு கீழே செய்யப்படும் பரிவர்த்தனைக்கு மட்டுமே பொருந்தும்.

ரூ. 5,000க்கு மேல் பரிவர்த்தனை செய்ய வேண்டுமெனில், வாடிக்கையாளர்களுக்கு ‘ஒரு முறை கடவுச்சொல்’ அனுப்ப வேண்டும். அதற்கு வாடிக்கையாளர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே பரிவர்த்தனை நடைபெறும்.

ஆட்டோ டெபிட் கட்டுப்பாடுகளை மீறி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி பணத்தை வங்கி பரிவர்த்தனை செய்தால் சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

இதனால் யார் யாருக்கு என்னென்ன சிரமம்?

இந்த புதிய முறையால் முறைக்கேடான பணப்பரிவர்த்தனை நடைபெறுவது தடுக்கப்படும் என்றாலும், முக்கியமான பணப்பரிவர்த்தனைகளுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாக இருக்கின்றது.

உதாரணமாக, வீட்டுக் கடன், மருத்துவக் காப்பீடு, மின்சாரக் கட்டணம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் அனுமதி அளிக்கவில்லை என்றால் சேவைகள் துண்டிப்பது அல்லது அபராதம் விதிக்கப்படும் ஆபாயமும் எழுந்துள்ளது.

மேலும், இதுபோன்ற சவால்களை சமாளிக்க வங்கிகள் தங்களின் தொழில்நுட்பத்தை கூடுதல் வலுப்படுத்துதல் அவசியம்.

Source Dinamani

 

Top Post Ad

Below Post Ad