Type Here to Get Search Results !

வாட்ஸ் அப் ல இனி டைப் பண்ண‌ வேணாம்! பேசினாலே போதும் அதுவே டைப் ஆகிவிடும். புது அப்டேட்!!

புதுப்புது அப்டேட்டுகளை வழங்கும் வாட்ஸ் ஆப்,

தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு நீளமான மெசேஜ்களை அனுப்புவர்களுக்கு எளிமையாக்க வாட்ஸ் ஆப்பில் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  

 



ஆம், இனிமேல் வாட்ஸ் ஆப்பில் இருக்கும் ஆடியோ (மைக்) வசதி மூலம் நீங்கள் கூறும் மெசேஜ்களை அதுவே டைப் செய்து நீங்கள் விரும்பும் நண்பர்களுக்கு அனுப்பும். WhatsApp Update : இனி டைப்பிங்கே வேணாம் எல்லாம் ஆடியோ தான்! வாட்ஸ் ஆப் ஒன்று போதும், உலகில் நடக்கக்கூடிய அனைத்தும் ஒரே இடத்தில நொடி பொழுதில் வந்தடையும் . யாருக்கு எது தெரிகிறதோ இல்லையோ ஆனால் வாட்ஸ் ஆப் மட்டும் அனைவருக்கும் தெரியும். ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் தனக்கு இருக்கும் யூசர்களை நாளுக்கு நாள் புது புது அப்டேட்டுக்களை தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட ஸ்டிக்கர்ஸ், குரூப் காலிங், கைவிரல் ரேகை சேவை என அனைத்தும் யூசர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்திருக்கும் மற்றொரு அப்டேட் தான் ஆடியோ வழியாக டைப்பிங். 



பொதுவாகவே வாட்ஸ் அப்பில் நமது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, நெருக்கமான்வர்களுக்கு நீளமான மெசேஜ்களை அனுப்புவோம். இந்த மெசேஜ்களை இனிமே நீங்கள் நேரம் எடுத்து டைப் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. வாட்ஸ் ஆப் கீபோர்டில் ரைட் கார்னரில் இடம்பெற்றிருக்கும் ஆடியோ மைக், இனிமே வாய்ஸ் மெசேஜ் அனுப்ப மட்டுமில்லை. நீங்கள் கூற நினைக்கும் மெசேஜ்கள்ளையும் டைப் செய்து அனுப்பும். உங்களின் நண்பர்கள் யாருக்காவது மெசேஜ் அனுப்ப வேண்டுமா அல்லது வந்த மெசேஜ்க்கு ரிப்பளை பண்ண வேண்டும் என்றாலும் சரி, முதலில் கீபோர்டில் இருக்கும் மைக்கை லாங் பிரஸ் செய்ய வேண்டும். பின்பு அதில் நீங்கள் டைப் செய்ய நினைக்கு தகவல்களை ஆடியோ வழியாக கூற வேண்டும். நீங்கள் கூறுவதற்கு ஏற்ப கீபோர்டில் மெசேஜ்கள் ஆட்டோமெட்டிக்காக பதிவாகும் சரியாக இருந்தால் அதை அப்படியே பகிரலாம். இல்லையென்றால் உங்கள் விருப்பம் போல் எடிட்டிங் செய்தும் அனுப்பலாம்.



வாட்ஸ் ஆப்பின் இந்த புதிய அப்டேட் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வளவு தான் இனிமேல் என்ன கவலை.. ஜாலியா விருப்பம் போல் எவ்வளவு பெரிய மேசேஜ் வேண்டுமானலும் ஈஸியாக அனுப்புங்கள்.


Top Post Ad

Below Post Ad