சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Animal/Laboratory Attendant
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.12,000
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் விலங்குகளை கையாளும் திறன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.02.2019
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: TRPVB, 2nd Floor, Central University Laboratory Building, TANUVAS, Madhavaram Milk Colony, Chennai -600 051
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பத்தாரர்கள் தங்களைப்பற்றி முழு விவரங்களையும் ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்கள் மற்றும் அசல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வு அன்று சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tanvas.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.