Type Here to Get Search Results !

2-வது சர்ஜிக்கல் ஸ்டிரைக், பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளதா? இந்தியா-பாகிஸ்தான் ராணுவ பலம் முழுவிவரம்.!



*இந்தியா- பாகிஸ்தான் ஆயுதங்கள் மற்றும் ராணுவ பலம் குறித்து வாஷிங்டனில் உள்ள சர்வதேச ஆய்வுகள் மைய  (CSIS)  தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது:-

*இந்தியாவில் 9,000 கிமீ (1,864 மைல்கள்) முதல் 5,000 கிமீ (3,106 மைல்கள்) வரை  பாயும் அக்னி -3 உள்ளிட்ட ஒன்பது வகை ஏவுகணைகள் உள்ளன.

*பாகிஸ்தானின் ஏவுகணைகள் சீன உதவியுடன் கட்டமைக்கப்பட்டது, இந்தியாவின் எந்தப் பகுதியையும் அடையக்கூடிய மொபைல், குறுகிய மற்றும் நடுத்தர அளவிலான ஆயுதங்களை உள்ளடக்கியதாக உள்ளது என  CSIS தெரிவித்துள்ளது.

*2,000 கிமீ (1,242 மைல்கள்) வரை, ஷாஹீன் 2 மிக நீண்ட தூரம் ஏவுகணை உள்ளது.

*இந்தியாவின் 130-140 அணு ஆயுதங்களை ஒப்பிடும்போது, பாகிஸ்தான் 140 முதல் 150 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என  SIPRI தெரிவித்துள்ளது.

*இந்தியாவில் 1.2 மில்லியன் ராணுவ வீரர்கள் உள்ளனர். 3565 போர் டாங்கிகள் உள்ளன. 3,100 காலாட்படை போர்  வாகனங்கள், 336 கவச வாகனங்கள் மற்றும் 9,719 பீரங்கிகள் உள்ளன.

*பாகிஸ்தானிடம்  5,60,000 போர்வீரர்கள், 2496 டாங்கிகள், 1605 கவச வாகனங்கள், 4472 பீரங்கிகள், 375  தானியங்கி  பீரங்கிகள் உள்ளன.

*127,200 பணியாளர்களும், 814 போர் விமானங்களுடன் இந்தியாவின் விமானப்படை கணிசமாக பெரியது.

*பாகிஸ்தான் 425 போர் விமானங்களைக் கொண்டுள்ளது, இதில் சீன-எஃப்என்ஜி 7 மற்றும் அமெரிக்கன் எப் -16 சபோர்  ஃபால்கோன் விமானங்கள் உள்ளன. இது ஏழு வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள் இந்தியாவை விட மூன்று அதிகமாக உள்ளது.

*இந்தியாவின் கடற்படை ஒரு விமான விமானத்தை கொண்டுள்ளது,  16 நீர்மூழ்கிக் கப்பல்கள், 14 அழிக்கும் கப்பல்கள் , 13 போர்க்கப்பல்கள், 106 ரோந்து மற்றும் கடற்கரை போர் கப்பல்கள், 75 போர் திறன் கொண்ட விமானம், 67,700 கடற்படை வீரர்கள் உள்ளனர்.

*குறிப்பிடத்தக்க வகையில் சிறிய கடலோரப்பகுதி கொண்ட பாகிஸ்தான், 9 போர் கப்பல்கள், 8 நீர்மூழ்கிக் கப்பல்கள், 17 ரோந்து மற்றும் கடலோரக் கப்பல்கள் மற்றும் 8 போர் திறன் கொண்ட விமானங்களைக் கொண்டுள்ளது.

*இந்தியாவை விட பாகிஸ்தான் ராணுவ பலம் குறைவுதான். இந்தியா ராணுவ பலத்தில் 4-வது ரேங்கிலும், பாகிஸ்தான் 17-வது ரேங்கிலும் உள்ளது.


Top Post Ad

Below Post Ad