Type Here to Get Search Results !

வயிற்றுவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற 54 வயது நபர்! அறுவை சிகிச்சையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!













வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 54 வயது நபரின், வயிற்றில் சுமார் 2 கிலோ அளவிற்கு கற்கள், பாட்டில் மூடிகள், நாணயங்கள் போன்றவைகள் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தென் கொரியாவைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் வயிற்று வலி காரணமாக Goyang மாகாணத்தில் இருக்கும் Inje University Ilsan Paik மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரை சோதித்த மருத்துவர்கள் வயிற்றில் சிறிய அளவிலான கற்கள் இருக்கலாம் என்று எண்ணி ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.






ஸ்கேனில் அவரின் வயிற்றுப் பகுதி முழுவதுமே ஏதோ ஒரு சிறிய அளவிலான சின்ன சின்ன பொருட்கள் இருப்பதை கண்டுள்ளனர்.

இதற்காக gastroscopy எனப்படும் சிகிச்சை முறையை பின்பற்றியுள்ளனர். அதாவது வாய் வழியாக டியூப் உள்ளே விட்டு, வயிற்றின் உள்ளே இருக்கும் பொருட்களை எடுப்பது.

ஆனால் எடுத்து கொண்டிருந்த போது, தொடர்ந்து கற்கள் போன்றவை வந்து கொண்டிருந்ததால் இதற்கு அறுவை சிகிச்சை முறை தான் சரி மறுநாள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.


அப்போது அவரின் வயிற்றில் இருந்து கற்கள், பாட்டில் மூடிகள் மற்றும் நாணயங்கள் போன்றவைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் அறுவை சிகிச்சை நல்ல படியாக முடிந்ததால், அவர் 9 நாட்களுக்கு பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

வயிற்று வலி காரணமாகவே மருத்துவமனைக்கு வந்த இவருக்கு, வாந்தி போன்ற எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை, அதே சமயம் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.




Top Post Ad

Below Post Ad