Type Here to Get Search Results !

டிவி தொடர் மீதான கவனத்திலிருந்து மக்களை திசை திருப்பிய செய்தி சேனல்களுக்கு நீதிபதிகள் பாராட்டு


தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கியிருந்த பொதுமக்களின் கவனத்தை `பிரேக்கிங் நியூஸ்' போட்டு செய்திகளின் மீது திசை திருப்பிய செய்தி சேனல்களின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு கேபிள் மற்றும் தனியார் டிவி சேனல்களுக்கு புதிய கட்டண முறையை டிராய் பிப்.1 முதல் அமல்படுத்தியுள்ளது. இந்த முறையில் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள், தாங்கள்பார்க்க விரும்பும் சேனல்களுக்குமட்டும் கட்டணம் செலுத்தினால்போதும். 

இதனால் வாடிக்கையாளர்கள் கேபிள் டிவியில் தாங்கள் விரும்பும் டிவி சேனல்களை மட்டும்பார்க்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது. மக்கள் தனியாகக் கட்டணம் கொடுத்துப் பார்க்கும் டிவி சேனல்களில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. 

கட்டண சேனலில் விளம்பரங்கள் வெளியிடுவது வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு எதிராகவும், இயற்கை நீதிக்கு முரணாகவும் உள்ளது. செய்தி சேனல்களில் அரசியல் நிகழ்வு உள்ளிட்ட முக்கியச் செய்திகளை வெளியிடும்போது, அந்தச் செய்தியை பார்க்க முடியாதவாறு அதிகளவில் திரையை மறைத்து விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. 

இது டிராய் விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் தனியார் கட்டண சேனல்களில் விளம்பரம் வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கே.நீலமேகம், தேவராஜ் மகேஷ் ஆகியோர் வாதிட்டனர். 

டிவி தொடர் மீதான கவனத்திலிருந்து மக்களை திசை திருப்பிய செய்தி சேனல்களுக்கு நீதிபதிகள் பாராட்டு*ப்போது நீதிபதிகள், "இந்தியாவில் 874 சேனல்கள் உள்ளன. இதில் விளம்பரம் வெளியிடுவது தொடர்பாக விதிகளை 125 சேனல்கள் மீறியதாக டிராய் தெரிவித்துள்ளது. 

அந்த சேனல்கள் மீதுஎன்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது?டிவி சேனல்கள், செய்திகளைப் போட்டிபோட்டுக் கொண்டு`பிரேக்கிங் நியூஸ்' வெளியிடுவதால் மக்களின் கவனம் தொடர்களில் இருந்து செய்தி சேனல்களுக்கு மாறியுள்ளது. இது மக்களின் மனம் மாசடையாமல் பாதுகாக்கப்படுகிறது. செய்தி சேனல்களின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது" என்றனர். 

பின்னர் டிராய், மத்திய ஒளிபரப்புத்துறை செயலர், தமிழக உள்துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 19-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Top Post Ad

Below Post Ad