Type Here to Get Search Results !

அமெரிக்கத் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் முதலிடம் பெற்று ரூ. 7 கோடி பரிசுத்தொகை வென்ற தமிழ்ச் சிறுவன்!



சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற அமெரிக்கத் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் தன்னுடைய பியானோ திறமையை வெளிப்படுத்திஉலகளவில் கவனம் ஈர்த்துள்ளார் 

சென்னையைச் சேர்ந்த 13 வயது லிடியன் நாதஸ்வரம். நேற்று ஒளிபரப்பான அந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் லிடியன் வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளார். இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 6 கோடியே 96 லட்சம் பரிசுத்தொகையை வென்றுள்ளார். இறுதிச்சுற்றில் தென் கொரியாவின் குக்கிவோனை அவர் தோற்கடித்தார். 

2 வயது முதல் டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கிய லிடியன், தற்போது மொசார்ட், பீதோவன் ஆகியோரின் இசைக்குறிப்புகளை பியானோவில்நன்கு வாசிக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரால் தற்போது 14 இசைக்கருவிகளை வாசிக்கமுடியும். பல நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்தச் சிறுவயதில் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். நேரடியாகப் பள்ளிக்குச் செல்லாமல் 1-ம் வகுப்பு முதல் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் வழியாகக் கல்வி கற்று வருகிறார். 

இவருடைய அக்கா அமிர்த் வர்ஷினியும் இசைக்கலைஞர். அவரும் பள்ளிக்குச் செல்லாமல் ஓபன் ஸ்கூலிங் வழியாகத் தற்போது +2 தேர்வை எழுதவுள்ளார். லிடியனின் தந்தை வர்ஷன் சதீஷ் இசையமைப்பாளராக உள்ளார். லிடியனின் இந்தச் சாதனைக்குத் தமிழ்த் திரையுலகினர் பலர் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.


Top Post Ad

Below Post Ad