Type Here to Get Search Results !

100வது வெற்றி பெற்ற தோனி‌ - தோனிக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

ஃபுல் டாஸாக வந்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அப்போது முதல் நடுவர் நோ - பால் என கையைத் தூக்கினார். பின்னர் ஸ்கொயர் அம்பையர் நோ பால் இல்லை எனச் சொல்ல நோ பால் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் மைதானத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டது. களத்துக்கு வெளியே இருந்த தோனி, முதலில் நீங்கள் ஏன் நோ பால் அறிவித்தீர்கள் என மைதானத்தின் நடுவில் வந்து அம்பையர்களிடம் கோபமாகக் கேட்டார்.

நோ பால் சர்ச்சையின்போது மைதானத்துக்குள் தோனி வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஐ.பி.எல் விதிமுறைகளை மீறியதாக தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதத்தை அபராதமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான ஐபிஎல் நிர்வாகத்தின் அறிவிப்பில், ``சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் விதிமுறைகளை மீறியதால் போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. தோனி ஐபிஎல் விதிமுறைகள் 2.20 வின்படி லெவல் 2 குற்றம் செய்தவராக அறியப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் விதிமுறைகளின்படி ஆர்ட்டிகிள் 2.20 என்பது, போட்டியின் ஸ்பிரிட்டுக்கு எதிராகச் செயல்படுவது குற்றம் என்றுள்ளது. அதில் குறைந்தபட்ச தண்டனையான ஊதியத்தில் 50% அபராதம் என்பதுதான் தோனிக்கு விதிக்கப்பட்டுள்ளது. தோனி லெவெல் 2 விதிமீறலை முதல்முறை செய்ததால் அவருக்குக் குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் தோனிக்கு கேப்டனாக 100வது வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Top Post Ad

Below Post Ad