நம்ம உடம்புல புதுசா எதாவது மாற்றம் வந்தா பலர் அத கவனிக்கவே மாட்டோம். காரணம், ஏதோ ஒரு சாதாரண பிரச்சினைனு நாம நினைச்சிட்டு விட்டுடுவோம். ஆனா, அது தான் பின்னாளில் உங்களோட மரணத்துக்கே காரணமாக இருக்கும். சிலருக்கு திடீருன்னு தழும்பு போல உடம்புல வந்துருக்கும். நம்மில் பலரும் அதை விளையாட்டாகவே எடுத்திருப்போம். ஆனால், இது போன்ற தழும்புகள் கூட மோசமான நோயின் வடிவில் நம்மை பாதிக்கும்.
சிறு சிறு கட்டிகள், கரும்புள்ளிகள், கீறல்கள், தடிப்புகள்...
இப்படி பல நம்ம உடம்புல வந்தாலும் இன்னைக்கு இருக்கற பிஸியான உலகத்துல அத ஒரு பொருட்டாகவே எடுத்துக்கறதில்ல. நம்ம உடம்புல தெரியுற எப்படிப்பட்ட புதுவித மாற்றங்களோ அல்லது அடையாளங்களோ நம் உயிருக்கே ஆபத்தாக இருக்கும் என்பதை இனி தெரிஞ்சிக்கலாம்.
மரு போன்றவை...
திடீரென்று உடலில் சில இடங்களில் மரு போன்று தோன்றினால் அதை சாதரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். இவை உங்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் இருப்பதை குறிக்கும் அறிகுறிகள். இது போன்ற அறிகுறிகள் உடம்பில் தென்பட்டால் சாதரணமாக விட்டு விடாதீர்கள்.
தடிப்பு
இடுப்பு, கழுத்து, தோல் பட்டை போன்ற இடங்களில் பெரும்பாலும் தடிப்பு போன்றவை உருவாக கூடும். இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளது. இறுக்கமான உடை அணிந்தாலோ, அல்லது ஏதேனும் பூச்சிகள் கடித்தாலும் இப்படிப்பட்ட அறிகுறிகள் ஏற்படும்.
சிவப்பு நிறம்
உடலில் காரணமே தெரியாமல் அரிப்புகளுடன் சிவந்த சிறு சிறு கட்டிகள் போன்று ஏற்பட்டால் அதை நிச்சயம் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். தவறான மருந்துகளால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும். மேலும், நுரையீரல், கல்லீரல், இதயம் போன்ற உறுப்புகளில் பாதிப்புகள் இருந்தாலும். அவற்றையும் இது சரி செய்து விடும்.
புள்ளிகள்
முகத்தில் இத்தனை நாட்களாக இல்லாமல் திடீரென்று புள்ளிகள் வந்தால் அதுவும் மிக பெரிய பிரச்சினையாக ஏற்பட கூடும். இது போன்ற அறிகுறிகள் தோல் புற்றுநோயிற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே, உஷாராக இருங்கள்.
சீழ் படிதல்
தோலில் சீழ் கட்டி கொண்டு சிவப்பு நிறத்தில் இருந்தால் செரிமான மண்டலத்தில் ஏதோ பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது. மேலும், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் உங்களுக்கு ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
வியர்வை
எப்போதுமே தோலில் வியர்வை வெளியேறி கொண்டே இருந்தால் தைராய்டு ஹார்மோனில் குறைபாடு உள்ளது என அர்த்தமாம். மேலும், இப்படியே வியர்வை வெளியேறி கொண்டே இருந்தால் அவை சரும பிரச்சினைகளையும் உண்டாக்கும்.
கால் வீக்கம்
கால் கீழ் பகுதியில் வீக்கம் ஏற்பட்டால் அது ஆபத்தான அறிகுறியாகும். இதய நோய்களுக்கான அபாயத்தை இந்த அறிகுறி குறிக்கிறது. இது போன்று நீண்ட நாட்களாக இருந்தால் நிச்சயம் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
மஞ்சள் தழும்பு
கண்ணிற்கு மேல் மஞ்சள் நிறத்தில் வீக்கத்துடன் கூடிய தழும்பு போன்ற அறிகுறி இருக்கிறதா? இது ஏதோ தோல் வியாதி என நினைத்து கொள்ளாதீர்கள். உடலில் கொலஸ்ட்ரால் அதிக அளவில் இருந்தால் இது போன்ற அபாயம் ஏற்படும். மேலும், இவை கணைய புற்றுநோய் மற்றும் சர்க்கரை வியாதிக்கான அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
வறட்சி
தோல் வறட்சி ஏற்பட்டால் அது கூட ஒரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். ஈரப்பதம் தோலில் குறைவாக இருந்தால் இவ்வாறு உண்டாகும். மேலும், இதனால் அரிப்பு, வீக்கம், காயம் போன்ற பாதிப்புகளும் தோலிற்கு உண்டாகும்.