Type Here to Get Search Results !

அமலுக்கு வந்த புதிய வருமான வரி விதிகள்!



பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் மாற்றம் எந்த மாற்றமும் செய்யவில்லை.



புதிய நிதியாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. 2019-2020 நிதி ஆண்டுக்கான  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருமான வரி குறித்துப் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.



எனவே ஏப்ரல் 1 முதல் வருமான வரி விதிகளில் பல புதிய மாற்றங்கள் வந்துள்ளன.




பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரம்பிற்குள் வருபவர்களுக்கு முழு வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரியை அடுத்த ஆண்டு தாக்கல் செய்யும் போது 5 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வரி செலுத்தத் தேவையில்லை.

மருத்துவச் செலவுகள் மற்றும் பயணப் படி போன்றவற்றுக்கான வரி கழிவு 40,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.



முன்பு வங்கி கணக்கில் உள்ள இருப்புத் தொகை மற்றும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் செய்துள்ள முதலீடுகளின் மூலம் வரும் வட்டி வருவாய் 10,000 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும். இந்த நிதியாண்டு முதல் அது 40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.



வீடு வாடகை மூலம் ஆண்டுக்கு 1.80 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஆண்டு வருமான வருகிறதென்றால் கூடுதல் தொகைக்கும் வரி செலுத்த வேண்டும். அது நடப்பு நிதியாண்டில் 2.40 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடு உள்ளது என்றால் அதற்கு தேசிய வரி செலுத்த வேண்டும் என்ற விதியை இந்த ஆண்டு முதல் இரண்டாவது வீட்டை சொந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் போது வரி செலுத்தத் தேவையில்லை. சொந்த ஒரு ஊரில் ஒரு வீடும், வேலைக்காகச் சென்ற இடத்தில் ஒரு வீடும் என்று மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் வாடகைக்கு விடாமல் சொந்த பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தினால் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிப்பதாக பட்ஜெட்டின் போது பியூஷ் கோயல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2019 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்ற நிதி ஆண்டுக்கான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனில் பான் கார்டுடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே செய்ய முடியும்


Top Post Ad

Below Post Ad