Type Here to Get Search Results !

தகுதிச் சுற்றுக்கு முன்னேறிய 4 அணிகள் - ஐதராபாத் இடம் பிடித்தது எப்படி?


மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய எட்டு அணிகளுக்கிடையே நடந்த ஐபிஎல் 12 போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் மே 5 ஆம் தேதி நிறைவடைந்தது.





இதில் முதல் 4 இடங்களை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் பிடித்துள்ளன. எனவே இவை இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியுள்ளன.





கடைசி லீக்கில் கொல்கத்தா அணி மும்பையிடம் தோற்றதால், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்த சுற்று(பிளே-ஆப்) அதிர்ஷ்டம் கிட்டியது.





லீக் சுற்று முடிவில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன.





இருப்பினும் ரன்-ரேட்டில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி (ரன்ரேட் +0.577) 4 ஆவது அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது.





ஐ.பி.எல். வரலாற்றில் 12 புள்ளியுடன் ஒரு அணி அடுத்த சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். அது மட்டுமின்றி புள்ளிப் பட்டியலில் 4 முதல் 8 ஆவது இடங்களை வகிக்கும் அணிகளுக்கு இடையே வெறும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் இருப்பது இன்னொரு ஆச்சரியம்.





நாளை (மே 7, செவ்வாய்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதலாவது தகுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் (இரவு 7.30 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.





8 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) 3 ஆவது, 4 ஆவது இடங்களைப் பெற்ற டெல்லி-ஐதராபாத் அணிகள் மோதும். இதில் தோற்கும் அணி வெளியேறும்.





வெற்றி காணும் அணி, முதலாவது தகுதிச் சுற்றில் தோல்வி கண்ட அணியுடன் இரண்டாவது தகுதிச் சுற்றில் 10 ஆம் தேதி சந்திக்கும். சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி 12 ஆம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.



Top Post Ad

Below Post Ad