ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனையை மாலை 6 மணி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. வங்கிகளில் ஆன்லைன் மூலம் பணம் அனுப்புவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆர்டிஜிஎஸ் எனப்படும் உடனடி பண பரிவர்த்தனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் ஆர்ஜிஜிஎஸ் பரிவர்த்தனை எண்ணிக்கை ரூ1,335 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது ஆர்டிஜிஎஸ் மூலம் மாலை 4.30 மணி வரை பணம் அனுப்ப முடியும். ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இனி 6 மணி வரை அனுப்பலாம் என ரிசர்வ் வங்கி நீட்டிப்பு செய்துள்ளது.