Type Here to Get Search Results !

ஒரு ஆண்டுக்கு எல்லாம் ஃப்ரீ... ஜியோவின் லேட்டஸ்ட் ஆஃபர்!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டும் ஒரு ஆண்டுக்கு பிரைம் சந்தாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் நுழைந்து சில வருடங்களே ஆன நிலையில், ஆஃபர்களையும் இலவசங்களையும் வழங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. இதனால், பல வருடங்களாக இந்த துறையில் இருந்த மற்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்து, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் இழந்தது. இருப்பினும், ஜியோ எப்போதும் போல வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் வகையில் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜியோ பிராம் சந்தாவை மேலும் ஒரு ஆண்டுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது

ஆம், ஏற்கனவே ஜியோ பிரைம் சந்தா பெற்றிருக்கும் அனைவருக்கும் இச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜியோ பிரைம் சந்தாவில் வாடிக்கையாளர்கள் ஜியோ சினிமா, ஜியோ மியூசிக், ஜியோ டிவி மற்றும் ஜியோ செயலிகளையும் இலவசமாக பயன்படுத்த முடியும். ஆனால், புதிய ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் சந்தா பெற ரூ.99 ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டும். ஜியோ பிரைம் சந்தா நீட்டிப்பு பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் பகுதியில் சென்று பார்த்து உறுதி செய்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad