நாட்டின் பிரதமராக மோடி, தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். இந்த நிகழ்வில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.