சென்னை குரோம்பேட்டையில் புதிய செல்போன் வேலை செய்யாததால் வாங்கிய கடை முன்பே செல்போனை வாடிக்கையாளர் எரித்துள்ளார். தாம்பரம் கடைமடையை சேர்ந்த தலைமலை என்பவர் ரூ.14000க்கு குரோம்பேட்டையில் செல்போன் வாங்கினார். சிம்கார்டு போட்டு ஆன்-செய்த போது செல்போன் வேலை செய்யாததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். செல்போனை விற்ற கடைக்காரர் வேறு போன் மாற்றித் தர மறுத்ததால் கடை முன்பு செல்போனை வாடிக்கையாளர் எரித்துள்ளார்.