டிவியிலிருந்து வரும் ஆடியோவை உங்கள் காதுக்கு மட்டும் கேட்க வைக்கும் கேட்ஜெட் ஒன்று கிடைக்கிறது.
இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.
என்னதான் ஸ்மார்ட்போன், லேப்டாப் வந்தாலும், வீட்டில் ஹாயாக அமர்ந்து கொண்டு டிவி பார்க்கும் சுகமே தனிதான். ஸ்மார்ட்போன், லேப்டாப்பில் படம் பார்க்கும் போது மிகஅருகில் வைத்து பார்ப்பதால், கண் திறன் பாதிக்கப்படும்.
அதுவே டிவி என்றால், சிறிது தொலைவில் இருப்பதால், கண் பாதிப்பு குறைவாகவே இருக்கும். சில நேரங்களில் டிவியில் நமக்குப் பிடித்த படங்கள் பார்க்கும் போது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும்.
குறிப்பாக இரவு நேரங்களில் டிவியை பார்க்கும் போது உறங்க தயாராகிக் கொண்டிருக்கும் பெரியவர்கள், குழந்தைகளுக்கு டிவி சத்தம் மிகவும் இடையூறாக இருக்கும்.
இது போன்ற நேரத்தில் மற்றவர்களுக்கு தொல்லை தராதவாறு டிவியிலிருந்து வரும் ஆடியோவை உங்களது ப்ளூ டூத் ஹெட் செட்டிற்கு மட்டும் கேட்பதற்கு சுலபமாக ஒரு வழி உள்ளது
அதற்கு உங்களிடம் ஒரு ப்ளூடூத் ஹெட் செட், ஒருப்ளூடூத் டிரான்ஸ்மீட்டர் இருந்தால் போதுமானது.
ப்ளூடூத் ஹெட்செட் அனைவருக்கும் தெரியும். டிவி.,க்கும் ப்ளூடூத் ஹெட்செட்டுக்கும் இடையே Bluetooth Transmitter இருந்தால் போதும்.
டிவி சவுண்ட்டை அப்படியே உங்கள் ஹெட்செட்டில் கேட்கலாம். அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங்களிலும், முக்கிய நகரங்களில் எலெக்ட்ரானிக்ஸ் கடைகளிலும் ப்ளூடூத் டிரான்ஸ்மீட்டர் கிடைக்கிறது.
குறைந்தபட்சம் 250 ரூபாயிலிருந்து சிறப்பம்சங்களுக்கு ஏற்றவாறு கிடைக்கிறது. சிலவற்றில் Transmitter, Receiver இரண்டும் உள்ள கேட்ஜெட் கூட கிடைக்கிறது.
டிவியிலிருக்கும் ஆடியோ அவுட் போர்ட்டை ‘Aux Cable’ மூலம் ப்ளூ டூத் டிரான்ஸ்மீட்டரோடு இணைக்க வேண்டும். சார்ஜ ஏற்றுவதற்கு உங்களது மொபைல் சார்ஜரையே இதற்கும் பயன்படுத்தலாம்.
இனி டிரான்ஸ்மீட்டரையும், ஹெட்செட்டையும் ஆன் செய்தால் போதும். ப்ளூ டூத் டிரான்ஸ் மீட்டர் ஹெட்செட் ரெடி. இனி மற்றவர்களுக்கு கேட்காதவாறு, நீங்கள் மட்டும் ஹெட்செட் மாட்டிக் கொண்டு டிவி பார்க்கலாம்.