Type Here to Get Search Results !

வருமான வரி ரிட்டன் தாக்கல்: இந்த 12 விவரங்கள் இல்லையா….! அப்ப 10,000 ரூபாய் Fine கட்டணும்!!

இதோ 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் வைபவம் இனிதே ஆரம்பமாகிவிட்டது. தனி நபர் மற்றும் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி செலுத்துவதற்கான இறுதிக் கெடு நாள் ஜூலை 31ஆம் தேதி வரைக்கும் காத்திருக்காமல் அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து உடனடியாக வருமான வரி தாக்கல் செய்வது நல்லது. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்திருந்த வருமான வரி பிடித்தத்தை இன்னும் கூட முறையாக வருமான வரித்துறைக்கு செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதால் ஊழியர்கள் தங்களின் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, இதுவரையிலும் பிடித்தம் செய்திருந்த வருமான வரி பிடித்தத்தை உடனடியாக செலுத்தி முறையாக ஊழியர்களுக்கு தேவையான ஆவணங்களை அளித்தால் மட்டுமே அவர்கள் தங்களின் வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்வது எளிமையாக இருக்கும். அதோடு தனிநபர்கள் மற்றும் மாத சம்பளதாரர்கள் ரிட்டன் தாக்கல் செய்வதற்கு தேவையான ஃபார்ம் 16 (Form 16) உள்பட 12 ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்துக்கொள்வது மிக அவசியமாகும்.

நெருங்கும் கெடு தேதி

வருமான வரி செலுத்துவதற்கான தவணை நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தணிக்கை செய்வதற்கான வரம்பிற்குள் வரும் அனைத்து நிறுவனங்களும் தங்களின் நிறுவன கணக்குகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தாக்கல் செய்வதற்கு இப்போதுதான் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருக்கும். நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள், பிற ஒப்பந்ததாரர்கள், ஏஜென்சிகள் மற்றும் தங்கள் நிறுவனத்தோடு வர்த்தக தொடர்பு வைத்துள்ளவர்களிடம் வருமான வரியை பிடித்தம் செய்திருக்கும்.

வருமான வரி பிடித்தம் பிடித்தம்

செய்திருந்த வருமான வரியை (Tax Deduction at Source) ஓவ்வொரு காலாண்டின் இடைவெளியிலும் முறையாக ஆவணங்களை தயார் செய்து வருமான வரித்துறைக்கு அனுப்பியும் இருக்கும். இன்னும் சில நிறுவனங்கள் TDS வரி பிடித்தம் செய்ததை இப்பொழுதுதான் விழித்துக்கொண்டு வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்வதற்கான ஆரம்ப வேலைகளை செய்ய ஆரம்பித்திருக்கும்.
வட்டியுடன் அபராதம் இவ்வாறு ஊழியர்களிடமும், ஒப்பந்ததாரர்களிடமும் பிடித்தம் செய்திருந்த TDS வரியை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் செலுத்தாமல் போவதால் அதற்காக தேவையில்லாமல் அபராதமும், வட்டியுடன் கூடிய அபராதத்தையும் தண்டமாக அழவேண்டியதிருக்கும். அதிலும் சில நிறுவனங்கள் ஊழியர்களிடம் பிடித்தம் செய்திருந்த TDS வரிப் பிடித்தத்தை முறையாக வருமான வரித்துறைக்கு செலுத்தாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகின்றன. இதனால் அந்த நிறுவனங்கள் கூடுதலாக வட்டியுடன் கூடிய அபராதத்தை செலுத்துகின்றன. இதனால் அந்த நிறுவனங்கள் நிதிச் சிக்கல்களை சந்திப்பதோடு, வருமான வரிச் சலுகையையும் இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கணக்கிற்கு வந்துவிட்டதா பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களிடம் பிடித்தம் செய்திருந்த TDS பிடித்தத்தை முறையாக அந்தந்த காலாண்டுகளில் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்திருக்கும். எனவே மாதச் சம்பளதாரர்களும் தனிநபர் பிரிவினரும், தங்கள் கணக்கில் வருமான வரிப்பிடித்தம் அனைத்தும் வரவு வைக்கப்பட்டுவிட்டதா என்பதை ஒரு முறைக்கு பலமுறை சரிபார்த்து இறுதித் தவணை தேதியான ஜூலை 31ஆம் தேதிக்கு முன்பாகவே தங்களின் வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்வது அவசியமாகும்.

அனைத்து ஆவணங்களும் தயாரா

தனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கு முன்பாக அனைத்து ஆவணங்களையும் உரிய முறையில் தயார் செய்து வைத்துக்கொண்டு அதன்பின் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்தால், பின்னாளில் வருமான வரித் துறையிடமிருந்து எந்த ஒரு நோட்டீஸ் வந்தாலும் பதற்றப்படாமல் ஏற்கனவே முறையாக தயார் செய்து வைத்திருந்த ஆவணங்களை அளித்து வருமான வரித் துறையின் ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கு முன்பாக என்னென்ன ஆவணங்களை தயார் செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம். ஃபார்ம் 16 (Form 16) மாதச் சம்பளம் வாங்குவோர் வருமான வரி பிடித்தம் செய்யும் வரம்பிற்குள் வரும்பட்சத்தில் அவர்களின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் வருமான வரி பிடித்தம் (Tax Deduction at Source) செய்திருக்கும். அப்படி பிடித்தம் செய்திருந்த TDS வரியை ஒவ்வொரு காலாண்டிலும் வருமான வரிப்பிடித்தத்தை முறையாக வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்வதோடு அதற்கான அத்தாட்சியாக சான்றிதழையும் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு தரவேண்டியது கட்டாயமாகும். இல்லை என்றால் அதற்காக அபராதம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும். ஃபார்ம் 16 படிவம் பிரிவு ஏ (Part A) மற்றும் பிரிவு பி (Part B) 2 பிரிவுகளாக இருக்கும். அதோடு 2018-19ஆம் நிதியாண்டின் வருமான வரி படிவம் 1(ITR-1) மற்றும் படிவம் 2 (ITR-2) என இரண்டோடும் இணைக்கப்பட்டிருக்கும். ஏ பிரிவில் வருமான வரி பிடித்தம் செய்த நிறுவனத்தின் பெயர், நிரந்தர கணக்கு எண் (PAN), வருமான வரி பிடித்தம் மற்றும் வசூல் எண் (Tax deduction and Collection Account Number-TAN), முகவரி, வரி பிடித்தம் செய்யப்பட்ட நபரின் பெயர், பான் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். பிரிவு பி யில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி பிடித்தம் செய்ததற்கான அடிப்படை சம்பள வருவாய், நான்கு காலாண்டுகளுக்கான வரி பிடித்தம் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். வருமான வரி தாக்கல் செய்ய விரும்புவோர் முதலில் இந்த ஃபார்ம் 16 (Form 16) படிவத்தை அடிப்படையாகக் கொண்டு வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யலாம். அல்லது வருமான வரி இணையதளத்திலேயே தாக்கல் செய்யும்போது இந்த ஃபார்ம் 16 படிவத்தை பதிவேற்றம் செய்து உடனடியாக வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யலாம். ஃபார்ம் 16ஏ (Form 16A) ஃபார்ம் 16பி (16B) ஃபார்ம் 16சி (16C) ஃபார்ம் 16ஏ படிவத்தை நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்ததாரர்கள், பிற ஏஜென்சிகளுக்கு பிடித்தம் செய்த வருமான வரி, வங்கிகள் டெபாசிட்டுகளுக்கான வட்டி வருமானத்திற்காக பிடித்தம் செய்த வருமான வரி பிடித்தம் போன்றவற்றுக்காக தருவதாகும். ஃபார்ம் 16பி (Form 16B) படிவம் என்பது அசையா சொத்துக்களை விற்றதற்காக வாங்கியவர் தருவதாகும். ஃபார்ம் 16சி (Form 16C) வாடகை தாரர் வீட்டு உரிமையாளருக்கு வாடகை தருவதற்காக அளிக்கும் சான்றிதழாகும். குறிப்பாக வாடகை வருவாய் ரூ.50 ஆயிரத்திற்கு கூடுதலாக இருக்கும் பட்சத்தில்தான் இந்த ஃபார்ம் 16சி படிவத்தை தரவேண்டியது அவசியமாகும். அதோடு, இந்த ஃபார்ம் 16 மற்றும் ஃபார்ம் 16ஏ, 16பி, 16சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஃபார்ம் 26ஏஎஸ் (Form 26AS). இதில் வரி பிடித்தம் செய்த நபர் அல்லது நிறுவனத்தின் பெயர் TAN எண், வரி பிடித்தம் செய்ததற்கான அடிப்படை தொகை, எந்த வங்கியின் மூலமாக பிடித்தம் செய்யப்பட்டது, முன்கூட்டி செலுத்திய வரி போன்ற அனைத்து விவரங்களும் உள்ளடங்கி இருக்கும். இதை வருமான வரித்துறை இணையதளத்தின் இணையதளமான TRACES தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வரி பிடித்தம் செய்த அனைத்தும் ஃபார்ம் 26ஏஎஸ் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமோ அல்லது நபரிடமோ கேட்டு உடனடியாக தவறுகளை சரி செய்து கொள்ளலாம். வரி சேமிப்புக்கான முதலீட்டு சான்று 2018-19ஆம் நிதியாண்டுக்கான வரி சேமிப்புக்காக வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் பங்குச்சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டம்(ELSS), ஆயூள் காப்பீடு, பொது சேமநல நிதி, தேசிய சேமிப்பு பத்திரம் போன்றவற்றில் முதலீடு செய்திருந்தால் அதற்கான சான்றுகளை வைத்திருக்கவேண்டியது அவசியமாகும். அதே போல் மருத்துவக்காப்பீட்டுக்காக பிரிவு 80டியின் கீழ் ரூ.25ஆயிரம் செலுத்தியிருந்தாலும், பிரிவு 80ஈ யின் கீழ் குழந்தைகளுக்கான உயர் கல்விக்கான கடனுக்கான வட்டி செலுத்தி இருந்தாலும் அதற்கான சான்றுகளை வைத்திருக்கவேண்டியது அவசியமாகும். வீட்டுக்கடனுக்கான சான்றறிக்கை மாத வருமானம் உள்ளவர்கள் வீட்டுக்கடன் வாங்கியிருந்தால் அதற்கான அறிக்கையை கட்டாயம் வாங்கி வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். வீட்டுக்கடனுக்கான வட்டியில் ரூ.2 லட்சம் வரை வருமான வரி சட்டப்பிரிவு 24சி (24C)யின் கீழ் வரி விலக்கு பெறமுடியும். இதை வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது வைத்துக்கொள்ளவேண்டியது கட்டாயமாகும். மூலதன ஆதாய சான்று ஏதேனும் சொத்துக்களை விற்றிருந்தால் அதன் மூலம் கிடைத்த லாபத்தையும், பரஸ்பர நிதி மற்றம் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளவற்றையும், 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டனில் கொண்டுவரவேண்டியது கட்டாயமாகும். கூடவே சொத்தை விற்றது, வாங்கியதற்கான பத்திர நகலையும் காண்பிக்கவேண்டியது அவசியமாகும். பங்குகள், மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை ரூ.1 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்திருந்தால் அதற்கு 10சதவிகித வருமான வரி செலுத்தவேண்டியது கட்டாயமாகும்.

பட்டியலிடப்படாத பங்குகள்

இவ்வகையான பங்குகளில் முதலீடு செய்திருந்தால் அதைப்பற்றிய விவரங்களை மாதச் சம்பளம் வாங்குவோர் 2018-19ஆம் நிதியாண்டின் வருமான வரி படிவம் 2ல் (ITR-2) குறிப்பிடவேண்டியது கட்டாயமாகும். அதோடு அதன் ஆரம்ப இருப்பு, 218-19ஆம் நிதியாண்டில் வாங்கியது, விற்றது, இறுதி இருப்பு ஆகியவற்றையும் குறிப்பிடிவேண்டியது அவசியமாகும். ஆதார் எண் ஆதார் எண் மற்றும் பான் எண்ணையும் கட்டாயம் இணைக்கவேண்டும். கூடவே வருமான வரி ரிட்டனிலும் குறிப்பிடவேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. இசிஎஸ் சரிபார்ப்பு தற்போது வருமான வரிக்கான ரீஃபண்ட் தொகை வங்கிக்கணக்கிலேயே வரவு வைக்கப்படும் என்பதால் உடனடியாக வங்கிக்கணக்குகளை வருமான வரிக்கணக்குகளோடு இணைத்து முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்வது அவசியமாகும். இல்லாவிட்டால் ரீஃபண்ட் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். வங்கிக்கணக்கு வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் போது வங்கிக்கணக்கு பற்றிய விவரங்களை கட்டாயம் குறிப்பிடவேண்டும். அதில் கணக்கு எண், வங்கியின் பெயர், ஐஃஎப்எஸ்சி கோட், கணக்கின் வகை ஆகியவற்றை குறிப்பிடவேண்டியது கட்டாயமாகும். வட்டிக்கான சான்று வங்கிகளில் போடப்பட்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி வருவாய் இருந்தால் அதற்கான சான்றிதழையும் வாங்கி வைத்துக்கொள்வது அவசியமாகும். வங்கிக்கணக்கு, தபால் ஆபீஸ் கணக்கு, பொது சேமநல நிதிகணக்கு முந்தைய ஆண்டுகளில் தாக்கல் செய்திருந்த வங்கிக்கணக்குகளை சரிபார்ப்பதும், வங்கிக்கணக்குகளில் ஏதேனும் வட்டி வருவாய், பங்காதாயம் ஆகியவை வரவு வைக்கப்பட்டிருந்தால் அதையும் 2018-19ஆம் நிதியாண்டின் வருமான வரி ரிட்டனில் குறிப்பிடவேண்டியது அவசியமாகும்.

என்ன மக்களே. மேலே சொன்ன இந்த 12 அவசியமான டாக்குமெண்ட்கள் இல்லை என்றால் உங்களால் ஒழுங்காக வரி கணக்கிட்டு தாக்கல் செய்ய முடியாது. அதோடு, வரும் ஜூலை 31, 2019க்குள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யவில்லை என்றால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.


Top Post Ad

Below Post Ad