Type Here to Get Search Results !

இணையதளத்தில் வரும் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை - ஆய்வில் தகவல

 86 சதவீத இணையவாசிகள் பொய்யான தகவல்களைதான் வாசிக்கிறார்கள் அதிலும் பேஸ்புக் எனப்படும் முகநூல் இணையதளத்தில்தான் அதிகமாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என உலகளாவிய ஆய்வில் தெரியவந்துள்ளது.இணையதளங்கள் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தும் அதேநேரத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கும் எதிரான மனப்பான்மையை உருவாக்கும் இம்மாதிரியான செயல்களை அரசாங்கமும், சமூக வலைதளங்களை நடத்தி வரும் நிறுவனங்களும் தடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


25 நாடுகளில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையவாசிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் , பொய்யான தகவல்களை பரப்புவதில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரியவந்துள்ளது.முக்கியமாக பேஸ்புக்கில்தான் அதிகமாக பொய்யான தகவல்கள் உலவுகின்றன. மேலும் யூடியூப், வலைப்பதிவுகள் மற்றும் ட்விட்டரிலும் வலம் வருகின்றன. எகிப்தியர்கள் இந்த பொய்யான தகவல்களால் அதிகமாக ஏமாறுகின்றனர். மற்றவர்களை காட்டிலும் பாகிஸ்தானியர்கள் விழிப்பாக உள்ளனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.இந்த கருத்து கணிப்பு, சர்வதேச ஆளுமை கண்டுபிடிப்பு மையத்தால் கடந்த டிசம்பர் 21, 2018 முதல் பிப்ரவரி 10, 2019 வரை தனிநபர் மற்றும் இணையதள நேர்காணல் மூலமாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Top Post Ad

Below Post Ad