Type Here to Get Search Results !

"இரவில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்" - எச்சரிக்கை ரிப்போர்ட் ! எந்தெந்த மொபைல் போனுக்கு எவ்வளவு கதிர்வீச்சு தெரியுமா?




மிக அதிகமான கதிர் வீச்சை வெளிப்படுத்தி, உடலுக்குத் தீங்கை ஏற்படுத்தும் செல்போன்கள் பட்டியலில், மிகப் பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளும் இடம்பிடித்திருப்பது பயன்பாட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன்களின் கதிரியக்க வீச்சு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனை குறித்து ஜெர்மனியின் ஃபெடரல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் சியோமி மற்றும் ஒன் ப்ளஸ் ஆகிய 2 சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் செல்போன்கள் அதிக கதிர்வீச்சு உள்ளவை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் சியோமியின் ஆண்ட்ராய்டு எம்.ஐ.ஏ.ஒன் ஸ்மார்ட்போன் 1.75 வாட்ஸ் கதிரியக்கத்தை வெளியிட்டு முதலிடத்திலும், ஒன் ப்ளஸ் 5டி 1.68 வாட்ஸ் கதிரியக்கத்தை வெளியிட்டு இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து சியோமி மை மேக்ஸ் 1.58 வாட்ஸ் கதிரியக்கத்தையும், ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் 6டி ஸ்மார்ட்போன் 1.55 கதிரியக்கத்தையும் வெளியிடுவது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஹெச்டிசி நிறுவனத்தின் U12 Lite ஸ்மார்ட் போன் 1.48 வாட்ஸ் கதிரியக்கத்தை வெளியிட்டு 5 ஆவது இடத்தையும், சியோமி நிறுவனத்தின் எம்.ஐ. மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் 1.45 வாட்ஸ் கதிரியக்கத்தை வெளியிட்டு 6 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இதேபோன்று பிரபல கூகுள் நிறுவனத்தின் பிக்ஸல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட் போனும், ஒன்பிளஸ் 5 மொபைலும் 1.39 வாட்ஸ் கதிரியக்கத்தை வெளியிடுவது ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிளின் ஐபோன் 7 மொபைல் 1.38 வாட்ஸ் கதிரியக்கத்தையும், சோனி எக்ஸ்பீரியா XZI Compact 1.36 வாட்ஸ் கதிரியக்கத்தை‌யும் வெளியிட்டு பட்டியலில் 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் SAR மதிப்பு 1.6 வாட்ஸ்/kg-க்குள்தான் இருக்கவேண்டும் என டிராய் அறிவுறுத்தியுள்ளது. ஒரு செல்போன் தொடர்பில் இருக்கும் போது, அதில் இருந்து வெளியாகும் "எலக்ட்ரோ மேக்னடிக்" அலைகள் அல்லது ரேடியோ கதிர்கள் உடலுக்குள் ஊடுருவும் அளவை நிர்ணயிப்பதே SAR மதிப்பாகும். உலகத்தை உள்ளங்கைகளுக்குள் கொண்டு வந்தது செல்போன்கள்தான் என்றாலும், அந்த தொழில்நுட்பத்தால் நம் உடல்நலத்தை பாதிக்க கூடிய சில விஷயங்களும் இருக்கதான் செய்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.


Top Post Ad

Below Post Ad