கூகுள் மேப்ஸ்-ன் சமீபத்திய அப்டேட்-ல், கூகுள் நிறுவனம் இந்தியாவின் பொது போக்குவரத்திற்கான மூன்று முக்கிய அம்சங்களை முதன்முறையாக இணைத்துள்ளது.
இந்த புதிய அம்சங்களின் மூலம் பயனர்கள் இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நிகழ்நேர போக்குவரத்து நெரிசலில் பேருந்தின் பயண நேரத்தை தெரிந்துகொள்ளலாம், நீண்ட தூர இரயில்களின் நிகழ்நேர இருப்பிடத்தை தெரிந்துகொள்ளலாம் மற்றும் ஆட்டோ ரிக்க்ஷா & பொது போக்குவரத்திற்கான புதிய பயண பரிந்துரைகளை காணலாம்.
நிகழ்நேர இரயில் நிலை (லைவ் டிரைன் ஸ்டேட்டஸ்) அம்சத்தின் மூலம் பொதுமக்கள், இரயிலின் வருகை நேரம், அதன் பயணத்திட்டம், தாமதம் மற்றும் பல்வேறு தகவல்களை ஒரே செயலியில் காணமுடியும்.
இந்த புதிய அம்சமானது கூகுள் நிறுவனத்தால் கடந்த ஆண்டு கையகப்படுத்தப்பட்ட "Where is My train" என்ற செயலி உடன் இணைந்து உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
இரயில் நிலையம்
மேலும் இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களின் வீட்டிலிருந்து துவங்கி இரயில் நிலையம் செல்லுதல் உள்பட முழுமையான பயணத்திற்கு தேவையான அனைத்து விதமான போக்குவரத்து வகைகளின் தகவல்களையும் காண அனுமதிக்கிறது
கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தி நிகழ்நேரத்தில் இரயில் எங்குள்ளது என தெரிந்துகொள்வது எப்படி என ஆர்வமாக உள்ளீர்களா? இதோ பின்வரும் வழிமுறையை பின்பற்றுங்கள்.
முன்கூட்டியே தேவையானவை:
* சமீபத்திய கூகுள் மேப்ஸ் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கும் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
* இணைய இணைப்பு
* ஆக்டிவ் கூகுள் அக்கவுண்ட்
வழிமுறைகள்:
படி#1
உங்களது ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் செயலியை இயக்கவும்.
படி#2
செயலியின் மேற்பகுதியில் உள்ள தேடு பெட்டியில் (Search bar) நீங்கள் செல்லவேண்டிய இரயில் நிலையம் அல்லது இடத்தை உள்ளீடு செய்யவும்.
உதாரணமாக நீங்கள் கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லவேண்டும் என வைத்துக்கொள்வோம். இங்கு புறப்படும் இரயில்நிலையம் கோயம்புத்தூர் மற்றும் செல்லும் இரயில்நிலையம் சென்னை என உள்ளீடு செய்யவும். பின்னர் திரையின் கீழே உள்ள 'திசைகாட்டி' பொத்தானை அழுத்தவும்
படி#3
இப்போது திரையில் "இருசக்கர வாகனம்" மற்றும் "நடைபயணம்" பொத்தான்களுக்கு இடையே உள்ள " இரயில்" பொத்தானை அழுத்தவும்.
படி#4
டிரைன் ஐகான் உள்ள ரூட் ஆப்சனை தேர்வுசெய்யவும்.
படி#5
பின்னர் இரயிலின் பெயரை கிளிக் செய்து, தற்போது அந்த இரயில் எங்குள்ளது என்ற நிகழ்நேர தகவல் அறிந்துகொள்ளலாம்.
இந்த புதிய அம்சமானது நீண்ட தூர இரயில்களுக்கு மட்டும் தான் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது