மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பொதுமக்களின் வாழ்க்கை, இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மழையின் காரணமாக 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மும்பையின் தாராவியில் உள்ள பால்கிபூர் பகுதியில் வசிப்பவர் சுல்தான்கான்.
இவர் குடும்பத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகளை ஏதோ கடித்துள்ளது. சுல்தானிடம் அவர் கூறவே, பூச்சாக இருக்கும் என கூறியுள்ளார். சிறிது நேரம் கழித்து பாம்பு ஒன்று அவருக்கு அருகில் ஓடியுள்ளது. பின்னர்தான் தெரிந்தது கடித்தது பாம்பு என்று.
உடனடியாக சற்றும் யோசிக்காமல் அந்த பாம்பைப் பிடித்தார் சுல்தான்கான். பின்னர் மகளுடனும், பிடித்த பாம்புடனும் மருத்துவமனைக்கு விரைந்தார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, கடித்த பாம்பு எதுவென்று தெரிந்தால், சிகிச்சை செய்ய எளிமையாக இருக்குமே என்று அந்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த தைரியமான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.