திருவள்ளூரில், நாளை மறுநாள், தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், நாளை மறுநாள் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இம்மாதம் நடந்த இரண்டு முகாம்களில், 33 பேருக்கு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.நாளை மறுநாள் காலை, 10:00 மணியளவில் நடைபெற உள்ள முகாமில், பல தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.முகாமில், 10, பிளஸ் 2 வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா படித்தவர்கள் பங்கேற்று, வேலைவாய்ப்பை பெற்று பயனடையுமாறு, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.