Type Here to Get Search Results !

அத்திவரதரை தரிசிக்க இனி 2 நாட்கள் கூட ஆகும்”- ஆட்சியர் தகவல்


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தரிசிக்க, இனி 2 நாட்கள் கூட ஆகலாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.


கடந்த 36 நாட்களில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து சென்றுள்ளனர். ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால், இனி வரும் நாட்களில் பல லட்சம் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிவார்கள் என ஆட்சியர் கூறியுள்ளார். அதனால், அத்திவரதர் தரிசனத்திற்கு 2 நாட்கள் கூட ஆகலாம் என்பதால், அதற்கேற்ற ஏற்பாடுகளோடு பக்தர்கள் வர மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.


பக்தர்கள் வசதிக்காக மேற்கு கோபுர வாசல் அகலப்படுத்தப்படவுள்ளதாகவும், வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி காஞ்சிபுரம் தாலுகாவுக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 17-ஆம் தேதி நண்பகல் 12 மணியோடு கிழக்கு கோபுரவாசல் மூடப்பட்டு, கோவில் வளாகத்திற்குள் இருக்கும் பக்தர்கள் மட்டும் மாலை 5 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad